வியாழன், 6 அக்டோபர், 2016

சிவகலை வித்தியாலயத்தில் கோலாகலமாக இடம் பெற்ற ஆசிரியர் தினம்

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலய மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று( 06.10.2016) வியாழக்கிழமை காலை 11 மணியளவில் பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு மற்றும் ஆசிரியர் மாணவர்களிக் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.இன் நிகழ்விற்கு பட்டிருப்பு கல்வி வயலத்தின் பாடசாலை மேன்பாட்டு திட்ட இணைப்பாளர் வனிதா சுரேஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


இதன் போது அதிபர் மற்றும் ஆசிரிய ஆசிரியைகளினால் ஆசிரிய கீதம் இசைக்கப்பட்டது.மற்றும் பாடசாலை மாணர்களின் ஆசிரியரின் மகிமை பற்றிய மணவர்களின் பேச்சுகளும் ஆசிரியர்களின் கவிதை பாடல் பேச்சுக்கள் மற்றும் ஆசிரியை குழாமின் கும்மி நடனம் ஆகிய இடம் பெற்றதுடன். அதிபர் மற்றும் ஆசிரிய ஆசிரியைகளுக்கு நினைவுச்சினமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


















Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624983

Translate