கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்றலை ஊக்குவிப்போம் ஆற்றலை வளர்ப்போம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மண்முனை மேற்கு(பட்டிப்பளை) பிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர்ளுக்கு ஆங்கில அகராதி வழங்கும் நிகழ்வு மட்/மே/கொக்கட்டிச்சோலை இராம கிருஷ்ணமிஷன் வித்தியாலயத்தில் ஆ. தனுஷ்கரன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு ஆன்மீக அதிதியாக அருள் மிகு தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு சிவசிறி சோதிலிங்கம் ஐயா அவர்கள் கலந்துகொண்டார்.
இதன்போது மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட ஆங்கில அகராதிகளை அமரர் சறோஜா விஜயநாயகம் அவர்களின் நினைவாக வைத்தியர் வி. ஜயநாயகம் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பித்தக்கது.
இதன்போது கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் அங்கத்தவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக