(லியோன்)
“தலையிடியைத் தரும் மின்கட்டணத்தை குறைப்பதற்கு இதோ வழி” எனும் தொனிப்பொருளில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
. “தலையிடியைத் தரும் மின்கட்டணத்தை குறைப்பதற்கு இதோ வழி” எனும் தொனிப்பொருளில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
தேசிய சேமிப்பு வங்கியின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் வங்கி முகாமையாளர் எஸ்.வி. சுவேந்திரன் தலைமையில் மக்கள் சூரியகதிர் மூலம் மின்சக்திய பெற்றுக்கொள்ளும் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வூட்டும் நடைபவனி இன்று மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது .
இதன்போது சூரியகதிர் மூலம் மின்சக்திய பெற்றுக்கொள்ளும் விழிப்புணர்வூட்டும் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன .
இந்த விழிப்புணர்வு நடைபவனியானது இன்று காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகி பிரதான வீதி ஊடாக பஸ் தரிப்பிட நிலையம் வரை சென்று மீண்டும் பிரதான வீதி ஊடாக , திருகோணமலை வீதி , புகையிரத வீதி தொடர்ந்து அரசடி வீதியூடாக கல்முனை வீதி , மீண்டும் பிரதான வீதி ஊடாக நண்பகல் 11.00 மணியளவில் வங்கியை வந்தடைந்தது .
இந்த விழிப்புணர்வு நடைபவனியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேசிய சேமிப்பு வங்கியின் கிளை முகாமையாளர்கள் ,,உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்
0 facebook-blogger:
கருத்துரையிடுக