புதன், 26 அக்டோபர், 2016

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலகதின் விளையாட்டு விழா

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலர் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழா மண்முனைப்பற்று பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில்  சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு மைதானத்தில்  இன்று (26) காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

பாலர்   பாடசாலை மாணவர்களுக்கிடையேயான   ஆற்றல் திறன்  மற்றும் ஒற்றுமை போன்றவற்றினை ஏற்படுத்துவதன் ஊடாக மாணவர்களுக்கு மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்திகொடுக்குமுகமாக  ஏற்பாடுசெய்யப்பட்ட இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக  பிரதேச செயலாளர் திருமதி என்.சத்தியானந்தி அவர்கள் கலந்துகொண்டதுடன் உதவி பிரதேச செயலாளர் திருமதி பிரசந்தன் லக்ஷன்யா , நிருவாக உத்தியோகத்தர் திருமதி சு.ஜெகநாதன் மற்றும் நிருவாக உத்தியோகத்தர் (கிராம உத்தியோகத்தர்) கே.குருநாதப்பிள்ளை ஆகியோரும் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இதன்போது   போட்டி நிகழ்வுகளில் கலந்துகொண்டு  வெற்றிபெற்ற சிறார்களுக்கான  பரிசில்கள் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டன.

























Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624983

Translate