(லியோன்)
சர்வதேச பெண் சிறுமிகள் தின விசேட விழிப்புணர்வு பேரணியும் சிறப்பு நிகழ்வுகளும் இன்று மட்டக்களப்பில் மிக
சிறப்பாக நடைபெற்றது .
மட்டக்களப்பு இளைஞர் அபிவிருத்தி “ அகம் “ மற்றும் மட்டக்களப்பு
மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில்
சர்வதேச பெண் சிறுமிகள் தின நிகழ்வை சிறப்பிக்கும் விசேட விழிப்புணர்வு பேரணியும்
சிறப்பு நிகழ்வுகளும் மட்டக்களப்பு மாவட்ட
பெண்கள் வலையமைப்பின் உதவித்திட்ட இனைப்பாளர் செல்வி ஜீ. தர்சினி தலைமையில் மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்வின் போது “சிறுமிகள் எமக்கு மிக மிக முக்கியமானவர்கள்”
“சிறுமிகள் மிக விசேட மாணவர்கள் “
“சிறுமிகளை நாம் கண்ணெனப் பாதுகாப்போம் “
“இளம்வயது திருமணத்தினை இல்லாதொழிப்போம் “
“பாலியல் சமத்துவத்தின் உறுதிப்படுத்துவோம் “
“பாலியல் துஸ்பிரயோகங்களிலிருந்து சிறுமிகளைப் பாதுகாப்போம் “
“கல்வியினைப் பெறுவதற்கு சிறுமிகளுக்கு சம சந்தர்ப்பத்தினை
ஏற்படுத்துவோம் “
‘சிறுமிகள் சுகாதாரம் மற்றும் சட்டடத்தேவைகளைச் சமமாக பெறுவதனை
உறுதிப்படுத்துவோம் “ போன்ற வாசகங்குடனான உறுதிமொழிகள் வழங்கப்பட்டதுடன் , சமுதாயத்தில் பெண்கள் மற்றும் பெண்
சிறுமிகளுக்கான எதிரான வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் மற்றும்
பெண் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை
தடுப்பதற்கான மகஜர் அரசாங்க அதிபருக்கு கையளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது
.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க
அதிபர் திருமதி .பி. எஸ் .எம் .சார்ள்ஸ்,
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் .கிரிதரன் , மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்
.நெடுஞ்செழியன் , மாவட்ட செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் குகதாசன்
மற்றும் “ அகம் “ மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள் , மாவட்ட பெண்கள
அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பல்கலைக்கழக மாணவர்கள் , பாடசாலை மாணவர்கள் என பலர்
கலந்துகொண்டனர் .
மட்டக்களப்பு இளைஞர் அபிவிருத்தி “ அகம் “ மற்றும் மட்டக்களப்பு
மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில்
நடைபெற்ற சர்வதேச பெண் சிறுமிகள் தின நிகழ்வில்
வாகரை ,கிரான் ,வவுணதீவு , பட்டிப்பளை ,செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களை சேர்ந்த 58
பல்கலைக்கழக மாணவர்களுக்கு
கல்விக்கான உதவித்தொகைகளும் வழங்கி
வைக்கப்பட்டமை குரிப்பிடதக்கது
0 facebook-blogger:
கருத்துரையிடுக