வெள்ளி, 28 அக்டோபர், 2016

சர்வதேச சிறுவர் மற்றும் பெண் பிள்ளைகள் சிறப்பு நிகழ்வுகள்

(லியோன்)

 சர்வதேச சிறுவர் மற்றும் பெண் பிள்ளைகள் தினமும் முதியோர் வார சிறப்பு நிகழ்வுகள் இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக  மண்டபத்தில் நடைபெற்றது .


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு , சமூக சேவைகள் மற்றும் வாழ்வின் எழுச்சி திணைக்களம் இணைந்து நடாத்தும் சர்வதேச சிறுவர் மற்றும் பெண் பிள்ளைகள் தினமும் முதியோர் வாரமும் தேன் சிட்டு சிறப்பு மலர் வெளியீடும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது .

இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் , தேன் சிட்டு சிறப்பு மலர் வெளியீடும் நிகழ்வும் பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது .

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ் .எம் .சார்ள்ஸ்,  மற்றும் அதிதிகளாக தேசிய செரி நிறுவன இயக்குனர்  வி தர்ஷன் , மண்முனை வடக்கு  உதவி பிரதேச செயலாளர் எஸ் .யோகராஜா மண்முனை வடக்கு  சமுர்த்தி முகாமையாளர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள் ,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , பாடசாலை மாணவர்கள்  என பலர் கலந்து  கலந்துகொண்டனர்

























Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624982

Translate