மட்டக்களப்பு சேர்ந்த 12 பொலிஸ் நிலையங்களை சேந்தத பொலிஸ் உயர் அதிகாரிகளை இன்று(05.10.2016) புதன் கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் மா.கணேசராஜாவினால் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டு பதிவாளர் சட்ட உதவி ஆணைக்குழு சட்டத்தரணிகள் சமூதாஞ்சார் சீர்திருத்தப்பிரிவு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது சந்தேக நபர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியானை நிறைவேற்றல்,போக்குவரத்து விதிகளை மிறுவோர் கசிப்பு சாராயம் போதைவஸ்து பிரச்சினைகளில் சம்பந்தப்படுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்தல்,முறைப்பாடுகளை உடனடியாகவும் தமிழ் மொழி மூலம் பெற்றுக் கொள்ளல்,தகுதிவாய்த பொலிஸ் உத்தியோகத்தர்களை நீதிமன்றிக்கு வழக்கு நடாத்துவதற்கு அனுப்புதல்,கடுமையான தண்டனைகள் மற்றும் உயர்ந்தபட்ச தண்டனைப்பணம் மூலம் குற்றங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் தொடர்பாகவும் பொலிஸ்சார் நிதிமன்றம் சட்டத்தரணிகள் மக்கள் தொடர்பில் சுமுகமான உறவுகளை பேணுதல் தொடர்பாகவும் காத்திரமான கலந்துரையாடல் முன் எடுக்கப்பட்டது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக