வியாழன், 26 நவம்பர், 2015

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சொக்கப்பனை எரிக்கும் பண்டைய பண்பாட்டு நிகழ்வு

கார்த்திகை விளக்கீட்டினை முன்னிட்டு நேற்று புதன்கிழமை ஆலயங்கள் மற்றும் வீடுகள் இந்துக்கள் தீபம் ஏற்றி வழிபாடுகளை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்கள் மற்றும் வீடுகளில் நேற்று திருவிளக்குகள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் திருக்கார்த்திகை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

மாமாங்கேஸ்வரருக்கு விசேட யாகம் மற்றும் அபிசேகம் நடைபெற்று வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா வந்ததுடன் ஆலய முன்றிலில் சொக்கைப்பாணை எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ ரங்கவரதராஜ குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

இதேபோன்று நேற்று மாலை வீடுகளிலும் இந்துக்கள் திருவிளக்கு ஏற்றி வீடுகளில் சுவாமிக்கு பிரசாதங்கள் படைத்து வழிபாடுகளை மேற்கொண்டனர்.

இந்துக்களின் பாரம்பரிய நிகழ்வாகவும் தெய்வாம்சம் பொருந்திய நிகழ்வாகவும் இவை ஆண்டு தோறும் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.
















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624983

Translate