முன்பள்ளி பருவ விருத்தி நிலைய ஆசிரியர்களுக்கு, சிறார்களின் கலை நிகழ்ச்சிச் செயற்பாடுகள் தொடர்பான பயிற்சிநெறியொன்று, பிரதேச சமூக சேவை நிலையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றதாக பிரதேச செயலக முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் இஸ்மாலெப்பை நபீலா தெரிவித்தார்.
ஏறாவூர் பிரதேச செயலக முன்பள்ளி பருவ அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 36 முன்பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 60 ஆசிரியைகள் கலந்துகொண்டார்கள்.
சிறுவர் வண்ணத்துப் பூச்சி சமாதானப் பூங்கா வளவாளர்களான கே.ஜி.ரூபன் புஸ்பகுமார மற்றும் கே. தேவகாந்தன் ஆகியோர் இந்த கலையார்வ பயிற்சிநெறியை வழங்கினர்.
இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலக நிவாரண சகோதரி எஸ்.எல்.குஹைஷா உட்பட இன்னும் பல அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக