பிரதேச அபிவிருத்தி வங்கியின் 30வது ஆண்டு நிறைவையொட்டி மட்டக்களப்பு செங்கலடி கிளையின் ஏற்பாட்டில் பலரின் உயிர்களை காப்பாற்றும் இரத்த தான நிகழ்வொன்று இன்று (25) புதன்கிழமை மாடிவேம்பு பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.
'உயிர்களை காப்பாற்றுவோம், இரத்தத்தை தானம் செய்வோம்' என்பதற்கு ஏற்ப வங்கியின் ஆண்டு நிறைவில் நல்தொரு செயற்பாட்டை முன்னெடுத்த இரத்த தான நிகழ்வில் தங்களின் இரத்தத்தை தானமாக வழங்கியிருந்தனர்.

பிரதேச அபிவிருத்தி வங்கியின் பிராந்திய பொதுமுகாமையாளர் லி.பி.எம்பி குமாரா, மாவட்ட முகாமையாளர் கே.சந்தானம், செங்கலடி கிளை முகாமையாளர் வி.குலேந்திரன், மாவடிவேம்பு பொறுப்பதிகாரி வைத்திய மையூரன், பிரதேச செயலாளர் மற்றும் மாவட்டத்திலுள்ள ஏழு வங்கி கிளையின் ஊழியார்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த வங்கியின் ஒத்துழைப்பின் பிரகாரம் வைத்தியசாலையில் அமைந்துள்ள விடுதி ஒன்றினையும் புனரமைத்து இன்றைய தினத்தில் திறந்துவைத்தனர்.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்ட செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயசிறி இங்கு உரையாற்றுகையில்;
வங்கியின் 30வது ஆண்டின் நிறைவை முன்னிட்டு மற்றவர்களின் உயிர்களையும் காப்பாற்றும் இவ்வாறான சிறந்ததொரு செயற்பாட்டை பாராட்டுவதுடன் அனைத்து ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதுடன், தெடர்ந்தும் இவ்வாறான தினங்களில் நல்லதொரு செயற்பாட்டை தொடர்ந்துசெய்யவேண்டும், அப்போதூன் நாம் பல உயிர்களைக் காப்பாற்றமடியும் என குறிப்பிட்டார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக