திங்கள், 30 நவம்பர், 2015

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 20561 விவசாயிகளுக்கு உதவி நிதி வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2014மற்றும்2015ஆம் ஆண்டுகளில் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான மானிய உரக்காப்புறுதி திட்டத்தின் கீழ் காசோலை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
Share:

இளைஞர்களை எந்த சமூகமும் புறக்கணிக்க கூடாது –ஞா.சிறிநேசன் பா.உ.

இளைஞர்களை எந்தவொரு சமூகமும் புறக்கணிக்ககூடாது.அவர்களின் சக்தியினை சரியான முறையில் ஆக்கபூர்வமான வழிக்கு கொண்டுசெல்வதன் மூலமாக அபிவிருத்தியடைய முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
Share:

karaitivunews.com இன் புலமையாளர் பாராட்டுவிழா - 2015.

காரைதீவின் செய்தி இணையதளமாக விளங்குகின்ற எமது சகோதர இணையத்தளமான karaitivunews.com ஊடகமானது வெகு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடாத்திய 2015ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த புலமையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும், அம் மாணவர்களை புலமையாளர்களாக்கிய ஆசான்களை கௌரவிக்கும் நிகழ்வும் மற்றும் 2014ம் ஆண்டு க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்று சாதனை படைத்த சாதனையாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்வும் இன்று 29ம் திகதி வெகு கோலாகலமான முறையில் இணையதளத்தின் பணிப்பாளர் திரு வை.கோபிகாந் அவர்களின் தலைமையில் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் விபுலானந்த அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கௌரவ அதிதிகள் மற்றும் சிறப்பு அதிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Share:

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஆளுமையுள்ள தலைவர்கள் முடிவு காண வேண்டும்

இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக்காண நல்லாட்சி அரசின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
இதனை சாதாகமாக பயன்படுத்தி ஆளுமை மிக்க தலைவர்கள் என்பதை உணர்த்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட த.தே.கூ. எம்.பி. ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
இதற்குப் பின்னர் இந்த நாட்டில் இருந்த தலைவர்கள் அனைவரும் பிரச்சினையை வளர்த்துவிட்டார்களே தவிர எவரும் தீர்க்க முன்வரவில்லை. அந்த தவறை நீங்கள் செய்துவிக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
எத்தனையோ சவால்களுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் உங்களுக்கு வாக்களித்தது இதற்காகவே என்றும் அவர் தெரிவித்தார்.
வரவு - செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பராளுமன்றம் சபை 9.30க்கு ஆரம்பமானது. வரவு - செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான 6 ஆவது நாளில் விவாதம் ஆரம்பித்த போதே மட்டு. மாவட்ட எம்.பி. ஞானமுத்து ஸ்ரீநேசன் மேற்கண்டவாறு பேசினார். அவர் தொடர்ந்தும் பேசும் போது,
சிறைக் கைதிகள், காணாமல் போனோர், பட்டதாரிகளுக்கு தொழிலின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தமிழ் இளைஞர், யுவதிகள் கலக்கமடை ந்துள்ளனர்.
இந்த மனங்களில் விரக்தி ஏற்பட்டால் அது அவர்களை வித்தியாசமாக சிந்திக்க தூண்டுவதுடன் நாட்டில் மீண்டுமொரு போராட்டம் உருவாக காரணமாகிவிடும் எனவே அதற்கு இடமளிக்காத வகையில் நல்லாட்சி நல்ல சமிக்ஞைகளை வெளியிட வேண்டும். வரவு - செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக 14 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அவர் பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தின் இளைஞர், யுவதிகளுக்கு தொழிலின்மை பாரிய பிரச்சினைகயாகவுள்ளது. சுமார் 1800 பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர். அரசின் பாடத்திட்டத்திற்கமைய கலைபீடம் கற்ற மாணவர்கள் தொழில் வாய்ப்புக்கு உகந்தவர்கள் அல்ல என்று மறுதலிக்கப்படுகிறார்கள். அரசின் பாடத்திட்டத்தை படித்த இவர்களுக்கு தொழில் வழங்க வேண்டியது இந்த அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
அதேபோன்று யுத்தத்தினால் மூடப்பட்ட வாழைச்சேனை காகித தொழிற்சாலை, ஓட்டுத் தொழிற்சாலைகள், அரிசி ஆலைகள் ஆகியன மீள திறக்கப்படுவதன் மூலம் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பால் உற்பத்தி தொழிற்சாலை இல்லாமை பாரிய குறைபாடாகும். இதனை நிவர்த்தி செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும். கரடியனாறு விவசாய பண்ணை முழுமையாக இயங்க வேண்டும்.
மட்டக்களப்பு வெள்ளாவெளி, கோரளைப்பற்று ஆகிய பிரதேசங்களில் காட்டு யானைகளின் அராஜகம் பாரிய பிரச்சினையாகியுள்ளது. யானைகள் எவ்வளவு தான் அனர்த்தம் புரிந்தாலும் அதனை பாதுகாப்பதற்கு மட்டும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிற போதும் பாதிக்கப்படும் மக்கள் குறித்து எந்தவொரு திட்டமும் இதுவரை வகுக்கப்படாமை வருத்தமளிக்கிறது.
இதேபோன்று தமிழ் இளைஞர், யுவதிகள் சிறையில் வாடுவதும் தமிழர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தான் சட்டம் என்பது ஒரு சிலந்தி வலை. பலம் மிக்க மிருகங்கள் அதனை அறுத்துவிட்டு வெளியில் நடமாட பலவீனமற்ற ஐந்துகள் அதில் சிக்கி உயிரை மாய்த்துக்கொள்ளும். அதேபோன்று தான் பாரிய குற்றம் இழைத்தவர்கள் வெளியிலும் சிறிய குற்றம் இழைத்தவர்கள் சிறையிலும் உள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.
யுத்தம் காரணமாக காணாமல் போனோர், கடத்தப்பட்டோர், அங்கவீனர்கள், உயிரிழந்தோர், விசேட தேவையுடையோர் களுக்கு நல்லாட்சியின் கீழ் வசந்தம் கொண்டு வரப்பட வேண்டும்.
தமிழ் மக்கள் தாமும் பிறரைப்போல் இயல்பு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டே பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வாக்களித்தார்கள். இவர்கள் இனிமேலும் இந்த அரசாங்கத்தினால் ஏமாற்றப்படக்கூடாது.
இலங்கையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டவை யாவும் ஏமாற்று ஒப்பந்தங்களாகும். இதே நிலை மீண்டும் தொடரக்கூடாது.

கே. அசோக்குமார்,
லக்ஷ்மி பரசுராமன்
Share:

மருந்தாளர் பரீட்சையில் சித்தியடையாவிட்டால் மருந்து விற்பனைக்கான அனுமதி இல்லை


தனியார் மருந்தகங்களில் பணியாற்றுபவர்கள் 20 முதல் 30 வருட கால சேவைக்கால அனுபவம் இருந்தும் மருந்தாளர் பாடத் தொகுதி பரீட்சையில் சித்தியடையாவிட்டால் குறித்த நிலையங்களில் மருந்துகள் விற்பனை செய்வதற்கான அனுமதி வழங்கப்படமாட்டாது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதாக ஐ.எம். எஸ். கெல்த் லங்கா லிமிட்டெட்டின் ஆராய்ச்சி உத்தியோகத்தர் எ.இசட். வை. வசந்தராஜன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்ட தனியார் மருந்தகங்களின் உரிமையாளர்கள் சங்கத்தின் நடப்பாண்டுக்கான புதிய நிர்வாக சபை தெரிவு இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு றோட்டரிக் கழக மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், மருந்தகங்களில் கட்டுப்பாட்டு விலைகளில் விற்பனை செய்வதோடு குறித்த நிலையம் குளிரூட்டப்பட்டு மருந்துகள் பாதுகாப்பாக உள்ளதோடு தகுதி வாய்ந்த மருந்தாளரின் சான்றிதழ் மற்றும் விற்பனை அனுமதிப்பத்திரத்தினுடாக மருந்துகள் விற்பனை செய்ய வேண்டும். 

இதற்கு பதிலாக அனுமதிப்பத்திரம் இல்லாமல் அனுபவமிக்கவர்களினால் நடத்தப்படுமிடத்து அதில் தொழில் புரியும் ஊழியர்களுக்குக் கூட தொழில் இல்லாமல் போகும் நிலை ஏற்படும் என்றார். 

இதன்போது, சபையின் தலைவராக வீனஸ் நேசிங் ஹோம் முகாமைத்துவப் பணிப்பாளர் வி.இராமநாதன், செயலாளராக விசன் பாமா முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.சுதாகரன், பொருளாளராக மை சண் மருந்தக உரிமையாளர் பி.எம்.எம். மன்சூர்,உப தலைவராக எம்.ஏ. நவ்சாத்,உப செயலாளராக ஏ.ஆர்.ஹகிப் ஆகியோரும் எம்.எம்.ஏ. லத்தீப், வி.அபூவக்கர், எம்.சி. ஜிப்ரி ஹசன், வி.தேவதாஸ், வி. ஜனார்த்தனன் ஆகியோர் நிர்வாக சபை உறுப்பினர்களாகவும் தெரிவுசெய்யப்பட்டனர். 
Share:

நாட்டில் இனவாத, மதவாத ரீதியாக செயற்பட்டுவரும் அமைப்புகள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் : எஸ்.வியாழேந்திரன்


நாட்டில் இனவாத, மதவாத ரீதியாக செயற்பட்டுவரும் அமைப்புகள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சபையில் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நாட்டில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு இனவாதமும், மதவாதமும் காரணமாகவுள்ளன. இனங்களுக்கிடையில் மதங்களுக்கிடையில் முரண்பாடுகளை மோதல்களை ஏற்படுத்துவதற்கென்றே இனவாத, மதவாத அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன. எனவே, இனங்களுக்கிடையிலான மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால், இவ்வாறான அமைப்புகளைத் தடைசெய்ய வேண்டும். இனவாதம், மதவாதத்துக்கு எதிராக கடந்த காலத்தில் போராடிய மனோ கணேசன் இன்று தேசிய கலந்துரையாடல் அமைச்சராக இருப்பதால் இவ்வாறான அமைப்புகளைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இராணுவத்தினருக்கு வழங்கப்படுகின்ற சலுகைகள் போராளிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் - வியாழேந்திரன்
மொழி ரீதியிலான பிரச்சினையே இன ரீதியிலான பிரச்சினைக்கு வித்திட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மொழி ரீதியிலான பிரச்சினை, இன ரீதியிலான பிரச்சினையாக மாற்றமடைந்து பாரிய யுத்தத்தை உருவெடுத்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இன்றும் சிங்கள மொழி தெரியாதவர்களே அதிகளவில் இருப்பதாக சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், அரச நிர்வாகத்தினுடைய ஆவணங்கள் சிங்கள மொழியில் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்கள் நாளாந்தம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், போக்குவரத்து பொலிஸாரினால் வழங்கப்படுகின்ற போக்குவரத்து குற்றப் பத்திரிகை கூட சிங்கள மொழியில் இருப்பதாகவும், அதனை வாசித்து புரிந்துக் கொள்ள முடியாத நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் வியாழேந்திரன் கூறியுள்ளார்.
மேலும், அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவுத்திட்டத்தில் கூட அதிகளவிலான தமிழ் பிழைகள் இருப்பதனை நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, யுத்தம் நிறைவு பெற்றும் இன்று வரை மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், பல பாடசாலைகள் இன்றும் இராணுவ முகாம்களாக இருப்பதாகவும், அதனை விடுவிக்கக்கூட அரசாங்கம் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனியார் காணிகள் இன்னும் மக்களுக்கு ஒப்படைக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், அவர்களுக்கான காணிகளை உரிய வகையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 90000 விதவைகள் இருப்பதாகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்ட போதிலும், புனர்வாழ்வளிக்கப்பட்ட 12000 பேராளிகளுக்கு எவ்வித சலுகைகள் இன்னும் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.
Share:

டெங்கு நுளம்புகளின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் துறைநீலாவைணையில்

(இ.சுதா)

களுவாஞ்சிகுடி பிரதேச செயலக நிருவாக எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் அதிகரித்து வரும் டெங்கு நுளம்புகளின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள்இகிராம உத்தியோகத்தர்கள்,சமூர்த்தி உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புக்களுடன் இடம் பெற்ற டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை பரிசோதனை செய்யும் துரித வேலைத்திட்டம் கடந்த சனிக்கிழமை துறைநீலாவணைக் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
Share:

உலகில் நான்கில் ஒரு பகுதியினர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் –டாக்டர் சுசிலா பரமகுருநாதன்

உலகில் வாழும் மக்களில் நான்கில் ஒரு பகுதியினர் மனநோயின் தாக்கத்திற்குட்பட்டுள்ளதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் உளநல வைத்தியர் திருமதி சுசிலா பரமகுருநாதன் தெரிவித்தார்.
Share:

ஞாயிறு, 29 நவம்பர், 2015

சிவானந்தா தேசியப்பாடசாலையின் 88ஆம் ஆண்டு சா.தர மாணவர்கள் அனுசரணையில் கல்விக் கருத்தரங்கு

மட்டக்களப்பு சிவானந்தா தேசியப்பாடசாலையின் 1988ஆம் ஆண்டு சாதாரணதர மாணவர்கணின் அனுசரணையுடன் யாழ் இ;ந்துக் கல்லூரி ஆசிரியர்களால் சிவானந்தா வித்தியாலயம், விவேகானந்த மகளிர் மகா வித்தியாலயம் ஆகியவற்றிலிந்து இம்முறை சாதாரண தரப்பரீட்சையில் தோற்றவுள்ள மாணவ மாணவிகளுக்கான கருத்தரங்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

நேற்றைய தினம் சிவானந்த தேசியப்பாடசாலையின் மண்டபத்தில் நடைபெற்ற இக் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில், மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அதே நேரம், பாடசாலை அதிபர் எஸ்.மோகன்ராஜ், மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் தேவசிங்கம், பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர்.

கணித, விஞ்ஞானப்பாடங்களுக்காக நடத்தப்பட்ட இக் கல்விக் கருத்தரங்கில் யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர்களான அ.கஜேந்திரன், சோ.ஹரிகரன், கே.உமாகரன் உள்ளிட்டோர் விரிவுரைகளை நடத்தினர்.

இரண்டு பாடசாலைகளிலும் தனித்தனியாக நடைபெற்ற இக் கருத்தரங்குகளில் பாடசாலைகளின் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Share:

திவிநெகும உத்தியோகத்தர்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்

-எம்.எச்.எம்.அன்வர்-

திவிநெகும உத்தியோகத்தர்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம் அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் -ஜகத் குமார திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம் இவ்வாறு அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜகத் குமார தெரிவித்தார்

ஓட்டமாவடி நகர மண்டபத்தில் திவிநெகும உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த மாநாடு 26.11.2015 அன்று சங்கத்தின் மாவட்ட தலைவர் என் ரவீந்திர குமார் தலைமையில் இடம்பெற்றது மேற்படி நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட திவிநெகும பணிப்பாளர் திரு பி குணரெத்தினம் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஐயூப்கான் ஆகியோர் கலந்துகொண்டனர்

செயலாளர் மேலும் தனதுரையில் 

அண்மைக்காலங்களில் சமுர்தித் திட்டத்திற்கும் சமுர்த்தி பயனாளிகளுக்கும் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் பாரிய அநீதி இடம்பெறவிருந்தது அப்போது அமைச்சராக இருந்தவர் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவாகும் இது சரியான முறையில் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கில் வழக்கு தாக்கல் செய்தோம் அத்துடன் யார் அமைச்சராக வந்தாலும் சமுர்த்தி திட்டத்திற்கு அநீதி இழைக்கப்படுமாயின் அதனை பார்த்துக்கொண்டு எமது சங்கம் சும்மா இருக்க முடியாது 

ஆரம்ப காலத்தில் 1945 ரூபா சம்பளமாக பெற்ற எமது சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தற்போது கணிசமான சம்பளங்களை பெறுகின்றனர் இவர்களுக்கான பதவியுயர்வுகள் காகிதாதிகள் காரியாலய வாடகை பிரயாணக்கொடுப்பனவு போன்ற அனைத்து வசதிகளையும் பெற எமது சங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ளது

எமது தொழிற்சங்கமானது கடந்த காலங்களில் இவற்றினை பெற்றுக்கொள்ள பாரிய போராட்டங்கள் சத்தியாக்கிரகங்களை நடாத்தியே பெற்றுக்கொண்டுள்ளது எனவே மேற்படி அகில இலங்கை சமுரத்தி மற்றும் விவசாய உத்தியோகத்தர் சங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பினை எதிர்காலத்தில் வழங்குவீர்கள் என நம்புகிறேன் இவ்வாறு தனதுரையில்  மேலும் தெரிவித்தார்

Share:

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பதவி வெற்றிடம்

Vacancies – Legal Officer, Accounts Officer, Technical Assistant – National Housing Development Authority – Ministry of Housing and Construction
Application Closing Date 2015-Dec-03

Share:

இலங்கையில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கண்புரை நோய்

இலங்கையின் கிராமங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்களிடையே கண்புரை நோய் குறித்த விழிப்புணர்வு இல்லை என கண் மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கண்புரை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கு தேவையான சிகிச்சை அளிக்க போதிய நிதியுதவிகளை பொதுமக்களிடமிருந்து பெறும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கிழக்கிலிருந்து புறப்பட்ட நடை பயணம் ஒன்று தலைநகர் கொழும்பில் முடிவடையவுள்ளது.
‘விஷன் 2020’ எனும் அமைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் குறைந்தது பத்துலட்சம் பேர் பலனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக இதில் ஈடுபட்டுள்ளவர்கள் நம்புகின்றனர்.
இலங்கை அரசின் நேரடி பங்களிப்பு இல்லாவிட்டாலும், அரச ஆதரவுடனேயே இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கண் மருத்துவர் டாக்டர். சிறிபரதன் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம் கண்புரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவம் அளிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கண்புரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அளித்துவரும் உதவிகள் போதியதாக இல்லை எனவும் டாகடர் சிறிபரதன் கூறுகிறார்.
Share:

எச்.ஐ.வி. நோய் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு

சர்வதேச எச்.ஐ.வி. தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி. நோய் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு இன்று சனிக்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையில் நடைபெற்றது.
இதில் மட்டக்களப்புஅம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்முஸ்லிம்மற்றும் சிங்களம்ஆகிய மூவினங்களையும் சேர்ந்த 50ற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது எச்.ஐ.வி. நோய் தொற்றும் காரணிகள்இந்நோய் தொற்றாமலிருப்பதற்கான வழிமுறைகள்மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும்நோய் தொடர்பான விடையங்களை ஊடகங்களில் எவ்வாறு வெளிக்கொணர்வது போன்ற பல விடையங்கள் இதன்போது எடுத்துரைக்கப்பட்டன.
கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல்.அலாவூதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே.முருகானந்தம்தேசிய பாலியல் நோய் தடுப்பு பிரிவு நிபுணர் வைத்தியர் சத்தியா ஹேரத் உள்ளிட்ட பல வைத்தியர்கள்சுகாதாரத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு எச்.ஐ.வி. நோய் தொடர்பான கருத்துக்களை வழங்கினர்.
Share:

மட்டு தமிழ் தேசிய மன்றத்தின் உருவாக்கம் கட்சிப் பிளவு இல்லை. பா.அரியம்


(பழுவூரான்)

மட்டக்களப்பில் மாவீரர் நாளில் புதிய அமைப்பான மட்டக்களப்பு தமிழ் தேசிய மன்றம் உருவாக்கப்பட்டு அதனுடாக மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு 27.11.2015 அன்று பா.உ. சீ.யோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் அவரின் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், மற்றும் பொன்.செல்வராசா, தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மற்றும் மாகாண சபை உறுப்பினர் மா.நடராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். 
Share:

சனி, 28 நவம்பர், 2015

சிறைக்கைதிகள் மனிதாபிமான முறையில் விடுவிக்காவிட்டால் அரசில் இருந்து வெளியேற நேரிடும் -சீ.யோகேஸ்வரன் எம்.பி.

நல்லாட்சி அரசாங்கம் மனிதாபிமான முறையில் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்யாவிட்டால் கிழக்கு மாகாணசபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகியவற்றில் இருந்து வெளியேறவேண்டிய நிலையேற்படும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
Share:

தண்ணீரினால் ஏற்படும் நோயினால் 20 செக்கனுக்கு ஒரு குழந்தை இறக்கின்றது - நிபுணர் டாக்டர் வைதேகி ஆர் பிரான்சிஸ்

உலகில் தண்ணீரினால் ஏற்படும் நோய் காரணமாக 20 செக்கன்களுக்கு ஒரு குழந்தை இறப்பதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டாக்டர் வைதேகி ஆர் பிரான்சிஸ் தெரிவித்தார்.
Share:

சட்ட விரோதமாக கொண்டுசெல்லப்பட்ட விலையுயர்ந்த மரங்கள் காத்தான்குடியில் மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட பெறுமதி மிக்க ஒரு தொகை மரக்குற்றிகள் காத்தான்குடி பொலிசாரினால் கைப்பற்றப்பட்டது.
Share:

சிறுவர் சுகாதாரத்தினை உறுதிபடுத்துவோம் கருத்தரங்கு துறைநீலாவணையில்

(இ.சுதாகரன்)

சிறுவர் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவோம் எனும் தொனிப் பொருளிலான செயலமர்வு துறைநீலாவணை தெற்கு பல்தேவைக் கட்டிட மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (28) நேற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ரி.தயாளன் தலைமையில் ; நடைபெற்றது.
Share:

பொதுநலவாய அமைப்பின் முதல் பெண் செயலாளர்

மொல்டாவில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பொது நலவாய அமைப்பிற்கான புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஸ்கொட்லாந்தின் பரோனஸ் பெட்ரீஷியா என்பவரே புதிய செயலாளர் நாயகமாக நியமிக்கப்ட்டுள்ளர். 

கடந்த நான்கு வருட காலமாக அந்தப்பதவியில் இருந்த கமலேஷ் சர்மாமாவின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்தே பரோனஸ் பெட்ரீஷியா செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

பொதுநலவாய அமைப்பின் செயலாளராக பெண்ணொருவர் நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 
Share:

சிட்னி உதயசூரியன் மாணவர் உதவி மையத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

சிட்னி உதயசூரியன் மாணவர் உதவி மையத்தினால் மட்டக்களப்பு நாவற்காடு மங்கிகட்டு அ.த.க பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று 27ம் திகதி இடம்பெற்றது.










சிட்னி உதயசூரியன் மாணவர் உதவி மையத்தினால் மட்டக்களப்பு கரையாக்கந்தீவு கணேசர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று 27ம் திகதி இடம்பெற்றது.











சிட்னி உதயசூரியன் மாணவர் உதவி மையத்தினால் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வானது நேற்று 27ம் திகதி நடைபெற்றது.




















Share:

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate