வியாழன், 12 நவம்பர், 2015

மதுபானசாலை வேண்டாம் என 3000ற்கும் அதிகமான ஆட்சேபனைகள் கையளிப்பு

கடந்த 3 வருடங்களுக்கு மேலாக காரைதீவு பிரதான வீதியில் அமைந்திருக்கின்ற மதுபானசாலையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை மக்களால் தொடர்ந்தேற்சியாக கோரப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே.

இதற்கிடையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் அனுமதி புதுப்பிக்க வேண்டியிருக்கும் காரணத்தினாலும் அதேநேரம் உரிய இடத்தை விட்டு வேறு இடத்திற்கு மேற்படி மதுபானசாலையினை கொண்டு செல்வதற்கு பல திட்டமிட்ட சதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருந்த போதிலும் ஏற்கனவே கிழக்கு மாகாண மதுவரி அத்தியட்சகரிடத்திலும், சட்டமா அதிபரிடத்திலும் கேட்டுக்கொண்டதற்கமைய காரைதீவில் எந்த ஒரு இடத்திலும் மதுபானசாலை அமைக்கக் கூடாது என்றுதான் காரைதீவு இந்துசமய விருத்திச் சங்கம் வேண்டிக்கொண்டது.

இதற்கிடையில் 2015.10.28ம் திகதி காரைதீவு பிரதேச செயலாளரினால் காரைதீவு கிராம உத்தியோகத்தர்களிற்கு  அனுப்பப்பட்ட கடிதத்தில் தற்போதைய மதுபானசாலையை இல.52B பிரதான வீதி, காரைதீவு எனும் இடத்திற்கு மாற்றுவதற்காக குறிப்பிடப்பட்டிருந்தது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. 

இதற்காண பொதுமக்கள் பொது அமைப்புகளின் ஆட்சேபனைகள் கேட்கப்பட்ட சந்தர்பத்தில் அனைவரும் முன்வந்து தமது ஆட்சேபனைக்கடிதங்களை மனப்பூர்வமாக வழங்கியிந்தனர்.

அந்தவகையில் 10,042 தனினபர் கையொப்பங்கள், 3012 தனிநபர் கடிதங்கள், 148 அமைப்புகளின் கடிதங்கள் மிகக்குறிய காலத்தில் சேகரிக்கப்பட்டது. பின்னர் இன்றையதினம்(12-11-2015) பொதுமக்கள் கூடி காரைதீவு பிதேச செயலாளர் திருமதி.சுதர்சின் ஸ்ரீகாந் அவர்களின் கரங்களில் கண்ணீர் மல்க மேற்படி மதுபானசாலை காரைதீவிற்கு வேண்டாம் என கோரிக்கை விடுத்து ஒப்படைத்தனர்.

இந்நிகழ்வில் காரைதீவை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமல்லாது சகோரதர இன அயல்கிராமங்களான மாளிகைகாடு சாய்ந்தமருது மற்றும் நிந்தவூர் கிராம பொது மக்கள் சார்ந்த பிரதிநிதிகள் மற்றும் பள்ளிவாசல் தலைவர்களும் கலந்து கொண்டு தத்தமது ஆட்சேபனை மனுக்களை வழங்கியிருந்தமை மிகவும் முக்கிய விடயமாக காணப்பட்டது.

பின்னர் ஏற்புரையாற்றிய பிரதேச செயலாளர் இவ்பொதுமக்களின் பிரச்சினைகள் அடங்கிய இந்த கடிதங்கள் மற்றும் ஆட்சேபனைகளளை பதிவுத்தபால் மூலம் அனுப்பி வைத்து தீர்வை மிகவிரைவில் பெற்றுதருவதாக கூறினார்.

 


















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate