மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியினால் கடந்த திங்கட்கிழமை தனக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களாக பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் ஆகிய இருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக