செவ்வாய், 12 மே, 2015

கிழக்கு மாகாண ஆசிரியர்கள் இடமாற்றம் கோரி ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் தங்களின் இடமாற்றத்தை உடனடியாக செய்து தருமாறு கோரி இன்று செவ்வாய்கிழமை காலை கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாங்கள் சொந்த மாவட்டங்களையும், கணவன் மற்றும் மனைவி, பிள்ளைகளையும் கடந்த 4, 5 வருடங்களாக இழந்து கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் கடமையாற்றி வருவதாகவும், தங்களின் இடமாற்றத்தை உடனடியாக செய்து தருமாறு கோரியே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்துள்னா்.
ஆர்ப்பாட்டத்தில் சுமார் 80 இற்கும் மேற்பட்ட அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1625150

Translate