திங்கள், 21 டிசம்பர், 2015

ஆரையம்பதி பிரதேச சபையினால் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு.


மண்முனைப்பற்று பிரதேசசபை எல்லைக்குட்பட்ட ஆரையம்பதி தொடக்கம் கிரான்குளம் வரையிலான பிரதான வீதிகளில் இரவுவேளைகளில் கட்டாக்காலியாக திரியும் மாடுகளினால் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் கடந்த 19.12.2015 திகதி இரவு ஆரையம்பதி பிரதான வீதியில் இருபதிற்கும் மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது.  
மண்முனைப்பற்று பிரதேச சபைச் செலாளர் திருமதி கா.ஜெ அருள்பிரகாசம் அவர்களின் பணிப்பிற்கமைய பிடிக்கப்பட்ட இம் மாடுகளுக்கு உரிமையாளர்களினால் பிரதேச சபையில்  தண்டப்பணம் செலுத்தப்பட்தன் பின்னரே இம் மர்டுகள் விடுவிக்கப்படும் என பிரதேசசபையின் வருமான பரிசோதகர் மு.வசந்தகுமார் தெரிவித்தார்.








Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624968

Translate