
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபை ஏற்பாடு செய்த மட்டக்களப்பு எழுத்தாளர்களின் நூல் கண்காட்சி இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.
பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று ஆரம்பமான கண்காட்சி வைபவம் மாநகர ஆணையாளர் திரு.ம.உதயகுமார் தலைமையில் இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது. பிரதம அதிதியாக கலந்து கொண்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கண்காட்சிக்கூடத்தை திறந்துவைத்தார்.
மட்டக்களப்பு எழுத்தாளர்களை கௌரவிப்பதற்காகவும் ஊக்கப்படுத்துவதற்காகவும் இக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இந் நிகழ்வில் மாநகர பிரதி ஆணையாளர், நூலகர்கள், நூலக ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் வாசகர் வட்ட பிரதிநிதிகள், நூல் நிலைய உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்
0 facebook-blogger:
கருத்துரையிடுக