உலக கிறிஸ்தவர்கள் கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு உலகமே மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் கல்லடி - டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் ஏற்பாட்டில் ஒளி விழா நிகழ்வானது மட்டக்களப்பு புனித இஞ்ஞாசியார் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக அருட்பணி ரொஷான் அடிகளார் கலந்துகொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக அருட்சகோதரி மேடளின், அருட்சகோதரி அமிர்தராணி, கார்மேல் சபை அருட்சகோதரிகள், தூய பிரன்சிஷ்ஷன் சபை அருட்சகோதரிகள் தூய சூசையப்பர் வயோதிபர் இல்ல அருட்சகோதரிகள், திருக்குடும்ப கன்னியர்கள் சபை அருட்சகோதரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது பங்கு மறையாசிரியர்களினால் மறைக்கல்வி சிறார்களிற்கு பயிற்றப்பட்ட பாடல்கள், நடன நிகழ்வுகள் மற்றும் நாடகங்களும் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அரங்கேற்றப்பட்டன.
இவ்வாண்டில் நடைபெற்ற மறைக்கோட்ட பரீட்சைகள் மற்றும் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு அதிதிகளினால் பரிசில்களும், நினைவுச் சின்னங்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக