திருகோணமலை மண்ணின் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட மூன்று குறும்படங்களான சப்பாத்து, மரணவீடு, ஆறுவதுசினம் ஆகியனவும் திராவிடம் பாடலின் வெளியீட்டு நிகழ்வும் உவர்மலை விவேகானந்தா கல்லூரி அரங்கில் இடம்பெற்றது.
ஹாட் பிரேக்கஸ் என்டடைமன்ட் தயாரிப்பாக வெளியிடப்பட்ட இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் கலந்து சிறப்பித்தார். கௌரவ விருந்தினராக முகாமைத்துவ கற்கையின் சிரேஸ்ட விரிவுரையாளர் என்.நாகேந்திரகுமார் மற்றும் சிறப்பு விருந்தினராக மலைமுரசு பத்திரிகையின் உரிமையாளர் ரா.ஸ்ரீஞானேஸ்வரன், தொடர்பாடல் கற்கை நெறியின் விரிவுரையாளர் எஸ்.சிவப்பிரியா, சிரேஸ்ட சட்டத்தரணி ஜெகஜோதி, சிரேஸ்ட குறும்பட தயாரிப்பாளர் ஆனந்தரமணன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் வரவேற்பு நடனம் இடம் பெறுவதையும் குறும்படம் மற்றும் பாடலை விருந்தினர்கள் வெளியிட்டு வைப்பதையும் பிரதம விருந்தினரால் இறுவெட்டு கையளிக்கப்படுவதையும் கலைஞர்களின் கலை நிகழ்வையும் காணலாம்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக