புதன், 23 டிசம்பர், 2015

கிழக்கில் களை கட்டும் நத்தார் பண்டிகைக் கொண்டாட்டங்கள்

DSC06243இயேசு பிரானின் பிறப்பையொட்டி, நத்தார் பண்டிகையைக் கொண்டாட கிழக்கு மாகாண கிறீஸ்தவ மக்கள் தயாராகி வருகின்றார்கள்.மட்டக்களப்பு மாவட்த்தில் நத்தார் பண்டிகை களை கட்ட ஆரம்பித்துள்ளது. காத்தான்குடி, மட்டக்களப்பு, வாழைச்சேனை, செங்கலடி உட்பட பல நகரங்களில் நத்தார் பண்டிகைக்கான பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் பெரும்ஆர்வம் காட்டி வருகின்றனர்.



மேலும், பொதுச்சந்தைகள், வியாபார நிலையங்களில் வியாபாரம் சூடுபிடித்துள்ளதையும் காணக்கூடியதாகவுள்ளது. அத்தோடு, வெளிமாவட்ட வியாபாரிகளும் இங்கு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.இவை தவிர, தத்தாரின் இன்னொரு சிறப்பான நத்தார் மரங்கள் மட்டக்களப்பின் பல்வேறு இடங்களிலும் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு, சிறுவர்களை மகிழ்விக்க நத்தார் பாப்பாவும் அங்காங்கே வருகைதந்து குதூகலப்படுத்துவதையும் காணக்கூடியதாக உள்ளதென எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

DSC06243
Inline image 1

Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624977

Translate