அறிக்கை சமர்ப்பித்தலும் விவாதங்களும் வாக்கெடுப்புகளும் தொடர்ச்சியாக மூன்று தினங்கள் இடம்பெறும். இன்று திங்கட்கிழமை முற்பகல் 9.35 மணிக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீ் அஹமட் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட நிதி அறிக்கையை சபையில் சமர்ப்பித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள் தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை தொடர்பான சட்ட
வரைபினை சபையயில் சம்மதத்தைப் பெறுவதற்காக முதலமைச்சர்
சமர்ப்பிப்பார். அத்தோடு 2015 ஆம் ஆண்டுக்கான இலக்குக் குறை நிரப்பு மதிப்பீடு 2016 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடு நியதிச் சட்டம் (வரவு-செலவுத் திட்ட அறிக்கை) சமர்ப்பிக்கப்படும். அதனைத் தொடர்ந்து ஆளுனர் செயலகம், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு, மாகாண பேரவைச் செயலகம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதங்கள் இடம்பெறும்.
இன்றைய தினம் கிழக்கு மாகாண கல்வி, தகவல் தொழிநுட்பக் கல்வி, முன்பள்ளிக் கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்கான நிதி அறி்க்கையினை கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபானி சமர்ப்பித்து உரையாற்றுவதுடன் குழு நிலை விவாதமும் வாக்கெடுப்பும் இடம்பெறும்.
இன்று மாலை முதலமைச்சரின் கீழ் உள்ள உள்ளூராட்சித் திணைக்களம், கிராமிய அபிவிருத்தி திணைக்களம், கட்டிடங்கள் திணைக்களம், கிராமிய கைத்தொழில்கள் அபிவிருத்தித் திணைக்களம்,
பிரதம செயலாளரின் செயலகம் (நிதி, திட்டமிடல், நிருவாகம், பொருளியல் சேவை) மோட்டார் போக்குவரத்து திணைக்களம், மாகாண உள்ளக கணக்காய்வுத் திணைக்களம், பிரதிப் பிரதம செயலாளர் (ஆளணி மற்றும் பயிற்சி செயலகம்) ஆகியவுற்றுக்கான நிதி அறிக்கையும் முதலமைச்சரினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
22 ஆம திகதி செவ்வாய்க்கிழமை மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு, காணி மற்றும் காணி அபிவிருத்தி, திறன் மற்றும் மனித வலு அபிவிருத்தி, மகளிர் விவகாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்கான நிதி அறிக்கையை அமைச்சர் ஆரியவதி கலபதி (நாளை 22)
சமர்ப்பித்து உரையாற்றுவதுடன் அன்றைய தினம் குழுவிலைவிவாதமும் வாக்கெடுப்பும் இடம்பெறும். விவசாய நீர்ப்பாசன கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடி கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரை ராஜசிங்கத்தினால் நிதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உரையாற்றுவதுடன் அன்றைய தினம் குழு நிலை விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறும்.
23 ஆம் திகதி புதன்கிழமை சுகாதார, சுதேச மருத்துவ நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ. எல். எம். நஸீரினால் நிதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உரையாற்றுவதுடன் அன்றைய தினம் குழு நிலை வாக்கெடுப்பும் இடம்பெறுவதோடு 2016 ஆம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த வரவு செலவு விவாதம் தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண பேரவை செயலகத்தின் செயலாளர் எம்.சி.எம்.சரீப் தினகரனுக்கு தெரிவித்தார். கிண்ணியா விசேட நிருபர்
கிழக்கு மாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி அறிக்கை இன்று திங்கட்கிழமை (21) சமர்ப்பிக்கப்படுவதை தொடர்ந்து எதிர்வரும் 23ம் திகதி வரை மூன்று தினங்களுக்கு விவாதங்கள் இடம்பெற்று அன்றைய தினம் பொது வாக்கெடுப்பும் நடைபெறும்.
சபை தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் சபையின் பிரதான மண்டபத்தில் வரவு செலவுத் திட்ட நிதி
0 facebook-blogger:
கருத்துரையிடுக