மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டமுரணான முறையில் காடுகளை அழித்தல், அனுமதிக்கப்படாத இடங்களில் அனுமதிக்கப்படாத நேரங்களில், அனுமதிக்கப்படாத அளவுகளில் மண் மற்றும் கிரவல் அகழ்தல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு முறைப்பாடுகளைச் செய்யமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மண் மற்றும் கிறவல் அகற்றுதல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் விடுத்துள்ள இவ் அறிவித்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதி அமைச்சர், கிழக்கு மாகாண சபை அமைச்சர், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகளுக்கமைவாக மண் மற்றும் கிறவல் அகற்றுதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
சூழல் சுற்று நிருபத்திற்கு அமைவாக மண் மற்றும் கிறவல் அகற்றுவதற்கான மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உட்பட புவிச்சரிதவியல் அளவைசுரங்கங்கள் பணியகப் பிரதிநிதி, வனப்பாதுபாப்பு திணைக்களப் பிரதிநிதி , மத்திய சுற்றாடல் பிதிநிதி மற்றும் பொலிஸ் திணைக்களப்பிரதிநித் உட்பட குழு ஒன்று மேற்படி விடயங்களைக் கண்காணிக்கவென நியமிக்கப்பட்டு மாவட்ட குழு நியமிப்பதற்கு ஏதுவாக குழு உறுப்பினர்கள் பெயர் விபரங்கள் சிபார்சு செய்யப்பட்டு செயலாளர் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த அமைச்சினால் மேற்படி குழு நியமனம் மேற்கொள்ளப்படும்.
பிரதேச செயலக மட்டத்தில் பிரதேச செயலாளரை தலைவராகக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் விண்ணப்பங்களை குறித்த குழு பரிசீலித்து அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக புவிச்சதிரவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்திற்குச் சிபார்சு செய்யும். ஜனாதிபதியின் செயலாளரது பி.சி.எம்.டி/டிசிசி/பொது இலக்க 08.12.2015 ஆம் திகதிய கடிதத்தின்படி வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீளக்குடியேறுதல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் உட்பட எந்தவொரு நடவடிக்கைக்கு காடுகளை அழிக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே சட்ட முரணாண முறையில் காடுகளை அழித்தல் அனுமதிக்கப்படாத இடங்களில், மற்றுமு; அனுமதிக்கப்படாத அளவுகளில், அனுமதிக்கப்படாத நேரங்களில், மண் மற்றும் கிறவல் அகழ்தல் போன்றவற்றால் நீர்ப்பாசன நடவடிக்கைகள் மேய்ச்சல் தரைக் காணிகள், நீர் வடிகான்கள் பாதைகள் என்பன பாதிக்கப்படுவதை தடுக்குமுகமாக இவை தொடர்பான முறைப்பாடுகளை பொது மக்கள் மேலதிக அரசாங்க அதிபரின் 065 2222236 இலக்கத்திற்குத் தெரிவிப்பதுடன் 0652224466 என்னும் தொலை நகல் இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும் முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக