சனி, 26 டிசம்பர், 2015

நாவலடி பகுதியில் சுனாமி நினைவுதினம் உணர்வுபூர்வமான அனுஸ்டிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக இழப்பினை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தத்தின் 11வது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பில் சுனாமி காரணமாக அதிக இழப்பினை ஏற்படுத்திய நாவலடி பிரதேச மக்களினால் இன்று காலை சுனாமியில் உயிர் நீத்தவர்களுகான ஆத்ம சாந்தி பூஜையும் பிதிர்க்கடன் பிரார்த்தனையும் சிறப்பாக நடைபெற்றது.

அரடிப்பிள்ளையார் ஆலய குருக்கள் சிவஸ்ரீ சி.தா.ராமதாஸ் தலைமையில் இந்த வழிபாடுகள் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாளேந்திரன்,ஞா.சிறிநேசன்,கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது பூஜைகள் நடைபெற்றதுடன் இறுதியாக இந்து சமுத்திரத்தில் பிண்டம் கரைக்கப்பட்டு பிதிர்க்கடன்கள் தீர்க்கும் நிகழ்வு நடைபெற்றது.






















Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624983

Translate