வியாழன், 31 டிசம்பர், 2015

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாதுகாப்பு' - அலி ஸாஹிர் மௌலானா

இந்த நாட்டில் தேர்தல் முறை மாற்றம் செய்யப்படுவதை விட, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்ந்தும் இருப்பதே சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாதுகாப்பானதென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
09 பொதுநல அமைப்புகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நடவடிக்கை, ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  'நல்லாட்சியின் பேரால் தற்போது நாட்டிலுள்ள இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளமை ஆரோக்கியமானதாகக்  கருதினாலும் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாமென்ற நியாயமான சந்தேகங்களும் உள்ளன' என்றார்.

'
தற்போது அரசியல் யாப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுவது தொடர்பில் முனைப்பான செயற்பாடுகள் நடைபெறுகின்றன. இதில் பெரும்பான்மையினரின் கட்சிகள் தேர்தல் தொகுதிகள் அதிகரிக்கப்பட வேண்டுமெனத் தெரிவிக்கின்றன. இந்த நிலைமை சிறுபான்மை இனங்களுக்கு பெரிதாக நன்மை தரப்போவதில்லை.

தேர்தல் முறை மாற்றத்தினால் சிறுபான்மை இன மக்களின் பிரதிநிதித்துவம் குறைவடையும் ஆபத்து எதிர்பார்க்கப்படுகிறது. சிறுபான்மை மக்களின் வாக்குப்பலத்தினால் பதவிக்கு வந்த ஜனாதிபதி  இந்த நிலைமையை கருத்திற்கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்' எனவும் அவர் கூறினார்
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624982

Translate