திங்கள், 21 டிசம்பர், 2015

கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொது பட்டமளிப்பு விழா – முழுமையான தொகுப்பு

கிழக்கு பல்கலைகழகத்தில் பொது பட்டமளிப்பு விழா பல்கலைகழக தகுதி வாய்தந்த அதிகாரி பேராசிரியர் திருமதி. உமா குமாரசுவாமி தலைமையில் இன்று (20) நல்லையா மண்டபத்தில் இடம்பெற்றது. 



இவ் வருடத்தில் இடம்பெற்ற பொது பட்டமளிப்பு வைபவத்தில் உள்வாரி, வெளிவாரி பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கிவைக்கப்பட்டன.



இரண்டு நாளாக இடம்பெற்று வரும் பொது பட்டமளிப்பு விழாவின் இறுதி நாளாகிய இன்று மூன்று கட்டங்களாக பட்டங்கள் வழங்கிவைக்கபட்டன.
நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலைகலாசார பீடம், மருத்தவபீடம், விவசாய பீடம், வர்த்தக முகாமைத்துவ பீடம் போன்ற பல பீடங்களில் பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட பட்டதாரிகளுக்கான படடங்களை வைபவரீதியாக கிழக்கு பல்கலைகழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் திருமதி. உமா குமாரசுவாமி கௌரவித்து வழங்கிவைத்தார்.



பல்கலைகழக நல்லையா மண்டபத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற பொது பட்டமளிப்பு விழாவில் உள்வாரியாக 1083 பேரும் வெளிவாரியாக 392 பேருமாக 1475 பேருக்கு இவ்வருடம் பட்டமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

























Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate