திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களின் ஊடகக் கல்வியை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டமொன்றிற்காக உதவி கோரி கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸிர் அஹமட்டிடம் முதலமைச்சர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (3) சந்தித்து திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் அப்துல்சலாம் யாசிம் மகஜர் ஒன்றினைத் கையளித்தார்.
அம்மகஜரில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
எமது திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தில் அறுபத்தைந்து ஊடகவியலாளர்கள் இருக்கின்றார்கள்.
இவர்களுக்கு செய்திகளை சேகரிப்பதற்கான புகைப்பட ஒளிப்பதிவு மற்றும் குரல் பதிவு கருவிகள் இல்லாது பல சிரமங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.
அதே போன்று இந்த ஊடகவியலாளர்களுக்கு ஒரு நாள் முழு நேர செயலமர்வு ஒன்றினை நடாத்துவதற்கான உதவிகளையும் கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில் தங்களிடம் கோரி நிற்கின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதில் திருகோணமலை ஊடக சங்கத்தின் சிரேஸ்ட ஆலோசகர் என்.நவரத்தினமும் (வீரகேசரி) கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக