வியாழன், 31 டிசம்பர், 2015

மட்டக்களப்பு சிவில்சமூக அமைப்பு சிவில் அமைப்பா அல்லது அரசியல் கட்சிகளில் அங்கம் வகிப்பவர்களின் அமைப்பா? – அரியம் கேள்வி

மட்டக்களப்பு சிவில்சமூக அமைப்பு உண்மையில் சிவில் அமைப்பா அல்லது அரசியல் கட்சிகளில் அங்கம் வகிப்பவர்களின் அமைப்பா?என்ற சங்கடம் மக்களுக்கு உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.
Share:

பெருமளவிலான போலி தங்த நிற மரஞ்சிகளை கடத்தியவர்கள் கைது

பெருமளவிலான போலி தங்த நிற மரஞ்சிகளை பஜீரோ வாகனத்தின் மூலம் கடத்தி விற்பனை செய்வதற்காக முற்பட்ட இருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Share:

பிரதேச அபிவிருத்துக்குழுவின் தலைவர்களாக தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நியமிக்கப்படாமை கவலைக்குரியது –பிரசன்ன இந்திரகுமார்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் பிரதேச அபிவிருத்திக் குழுக்களின்  தலைமைப் பதவிக்கு தமிழர்கள்  எவரும் நியமிக்கப்படாமை குறித்து கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரக்குமார் கவலையும் விசனமும் வெளியிட்டுள்ளார்.
Share:

12 இராசிகாரர்களுக்கும் “கெஜகேசரி யோகம்” - புத்தாண்டு ராசி பலன் - 2016


வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று புத்தாண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டு பிறப்பின் விசேஷம் என்னவென்றால், 12 இராசிகாரர்களுக்கும் “கெஜகேசரி யோகம்” என்கிற சிறப்புக்குரிய யோகத்தை கொடுத்து மகிழ்விக்க போகிறது.
சிம்ம இராசி, கன்னி லக்கினம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறக்கும் ஆங்கில புத்தாண்டு, அமோகமாக இருக்கும். செவ்வாய், சுக்கிரன் பரிவர்த்தனை பெறுவதால், நாட்டில் தொழில் வளம் விருத்தியாகும். அன்னிய நாட்டவரின் அதட்டல் அடங்கிவிடும். விண்வெளி ஆராய்ச்சிகள் வெற்றி பெறும். மக்களுக்கு தேவையான வசதிகள் பெருகும். விவசாயம் செழித்தோங்கும்.
இப்படி மகிழ்ச்சியான புத்தாண்டாக இருப்பினும், லக்கின இராகு நோய் நொடிகளை கொடுக்கும். ஆனாலும் பெரிய பாதிப்பு இல்லாமல் தக்க நடவடிக்கையால் அடங்கி விடும். ஸ்ரீ துர்காதேவி அனுகிரகத்தால் குருவும், சந்திரனும் அனுகூலமான சேர்க்கையால் யோகத்தை தரும். எப்படிபட்ட பிரச்னையாக இருந்தாலும் தாக்காது. ஸ்ரீ துர்காதேவியை வணங்குவோம், ஆனந்தம் அடைவோம். நல்வாழ்த்துக்கள்!
மேஷம்
அன்பர்களே ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு பஞ்சஸ்தானத்தில் குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், எதிர்பாரா யோகம் வந்தடையும். தடைபட்ட காரியங்கள் கைக்கு வந்து சேரும். 5-க்குரிய சூரியன்,9-ஆம் இடத்தில் உள்ளார். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. 12-ஆம் இடத்தில் உள்ள கேது, தெய்வ ஸ்தலங்களுக்கு சென்று வரும் பாக்கியத்தை தருவார். 6-இல் இராகு இருப்பதால், கடன் பிரச்னை சற்று குறையும். 10-ஆம் இடத்தில் உள்ள புதன், தடைபட்ட கல்வியை தொடரச் செய்யும். புதிய தொழில் தொடங்குவீர்கள். தளர்ந்த தொழில் புத்துயிர் பெறும். அஷ்டம சனியாக இருப்பதால், பிணை கையெழுத்து, கூட்டாளி விஷயங்களில் கவனம் தேவை. ஸ்ரீதுர்கா தேவி அருளால் மகிழ்ச்சியான வாழ்க்கை பொங்கும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் ஸ்ரீ துர்கை அம்மனுக்கு, செவ்வாய் கிழமையில் எலுமிச்சை தீபம் ஏற்றுங்கள். அத்துடன், மாதத்தில் ஒரு செவ்வாய்க் கிழமை இராகு காலத்தில் ஸ்ரீ துர்கைக்கு எலுமிச்சை மாலை அணிவியுங்கள். உங்கள் வாழ்க்கையில் வசந்த காற்று வீசும்.
ரிஷபம் 
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு சுகஸ்தானத்தில் குரு, சந்திரன் இணைந்து கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், தடைபட்ட கட்டட வேலை வேகமாக கட்டி முடிக்கப்படும். வாகனம் விருத்தி உண்டு, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையும். 6-ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால், நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த நோய் நொடி நீங்கும். விரோதியும் அடி பணிவான். அஷ்டமஸ்தானத்தில் சூரியன் உள்ளதால், குடும்பத்தில் சற்று சிறு,சிறு பிரச்னைகள் எழலாம். ஆனாலும் பெரிய பாதிப்பு வராது. பஞ்சமஸ்தானத்தில் இராகு அமையப்பெற்றுள்ளார். பூர்வீக சொத்தால் லாபம் வரும். சப்தமத்தில் சனி, சுக்கிரன் இருப்பதால், கூட்டு தொழில் லாபம் பெறும். 2016-ஆம் ஆண்டு உங்களுக்கு முருகன் அருளால் முன்னேற்றமான வாழ்க்கையாக அமையும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் முருகப் பெருமானை வணங்குங்கள். ஒரு முறையாவது திருத்தணிக்கு சென்று உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள். செவ்வாய்க் கிழமையில் முருகனுக்கும், செவ்வாய் பகவானுக்கும் வாசனை மலர்களை சமர்ப்பியுங்கள். முருகப்பெருமானின் ஆசியால் தடை கற்கள் படிகல்லாக மாறி உங்கள் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்படும்.
மிதுனம்
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு 3-ஆம் இடமான வெற்றி, புகழ்-கீர்த்தி ஸ்தானத்தில் குரு, சந்திரன் அமர்ந்து, கெஜகேசரியோகத்தை தந்துள்ளனர். இந்த கெஜகேசரி யோகமானது உங்களுக்கு புகழ், கீர்த்தி ஸ்தானத்தில் அமைந்திருப்பதால், மற்றவர்கள் பெருமைபட வாழ்வீர்கள். சகோதரவர்க்கத்தால் நன்மை கிடைக்கும். இருப்பினும், சுகஸ்தானத்தில் இராகு இருப்பதால் உடல் நலனில் கவனம் தேவை. 6-ஆம் இடத்தில் சனி, சுக்கிரன் இணைந்து இருக்கின்ற காரணத்தால், எடுத்த காரியத்தை வெற்றி பெறச் செய்யும். திருமணம் நடைபெறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். அஷ்டமஸ்தானத்தில் புதன் உள்ளதால், அயல் நாட்டு தொழில் தொடர்பு வர வாய்ப்புண்டு. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வரலாம். 10-ஆம் இடத்தில் கேது இருப்பதால், செய்யும் தொழிலில் நிதானம் தேவை. அகலகால் வைக்கக் கூடாது. விநாயகப் பெருமானை வணங்குங்கள், அனைத்தும் நன்மையாக வந்தடையும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் மாலை அணிவியுங்கள். வியாழக் கிழமையில் விநாயகர் கோயிலுக்கு சென்று தேங்காயை இரண்டாக உடைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். எடுக்கும் காரியம் தேங்காமல் கணபதியில் அருளால் சட்டேன்று நிறைவேறும். சூரத்தேங்காயும் உடைத்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.
கடகம்
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு தனஸ்தானம் என்கிற இரண்டாம் இடத்தில் குரு, சந்திரன் இணைந்து கெஜகேசரி யோகத்தை உண்டாக்குவதால், மண்ணும் பொன்னாகும். குடும்பத்தில் சுபிட்சமான செலவுகள் ஏற்படும். கடன் சுமை தீரும். புதிய தொழில் உருவாகும். எதிர்பார்த்த நற்காரியங்கள் நிறைவடையும். சுகஸ்தானஸ்தில் செவ்வாய் உள்ளார். வாகன விஷயங்களில் செலவுகள் வரலாம். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. பஞ்சமஸ்தானத்தில் சனி, சுக்கிரன் அமையப்பெற்றுள்ளதால், கவலையே வேண்டாம். வழக்கு பிரச்னை அனைத்தும் பஞ்சு போல் பறந்து விடும். பணம் தாராளமாக வந்தடையும். பாக்கிய ஸ்தானத்தில் ஞானகாரகனான கேது அமையப் பெற்றுள்ளார். குலதெய்வம் அருளால் நன்மைகள் தேடி வரும். 6-ஆம் இடத்தில் குடும்பாதிபதியான சூரியன் இருப்பதால், யாருக்கும் பெரிய அளவில் கடன் கொடுக்கும் வேலை வேண்டாம். மற்றபடி இந்த 2016-ஆம் ஆண்டில் உங்கள் குலதெய்வத்தின் அருளால் மகிழ்ச்சியான வாழ்க்கையாக அமையும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் உங்கள் குலதெய்வத்திற்கு பால் அபிஷேகம், சந்தனம், பன்னீர் அபிஷேகமும், குங்கும அர்ச்சனையும் செய்து, வஸ்திரம் அணிவியுங்கள். முடிந்தால் பொங்கல் வைத்து வழிபடுங்கள். குலதெய்வத்தின் அருளால் உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கும்.
சிம்மம்
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் ஜென்ம இராசியில் சந்திரனுடன், குருவும் இணைந்து, கெஜகேசரி யோகத்தை உண்டாக்குவதால், புதிய உத்வேகம் எழும். குடும்பத்தில் சுபிட்சம் பெருகும். தடைப்பட்டு வந்த திருமணம், தடை இல்லாமல் நடக்கும். தனஸ்தானத்தில் இராகு இருக்கின்ற காரணத்தால், குடும்பத்தினரை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். கீர்த்தி ஸ்தானத்தில் செவ்வாய் உள்ளார். மற்றவர்கள் பாராட்டும் படி சாதனை படைப்பீர்கள். சுகஸ்தானத்தில் சனி, சுக்கிரன் இணைந்திருப்பதன் காரணத்தால், சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. 6-ஆம் இடத்தில் புதன் உள்ளார். கடன் பிரச்னை சற்று இருக்கலாம். தேவை இல்லாமல் விரோதம் வளர்க்க வேண்டாம். பரபரப்பு அவசரம் கூடாது. காரணம், இந்த தன்மைகளை புதன் உருவாக்குவார். ஆகவே கவனம் தேவை.
உங்கள் இராசிக்கான பரிகாரம் வெள்ளிக்கிழமையில், சுக்கிர பகவானை வணங்குங்கள். சனிக்கிழமையில் பெருமாளை வணங்குங்கள். பெருமாளுக்கு கற்கண்டு படைத்து வணங்கி, அந்த பிரசாதத்தை சாப்பிடுங்கள். முடிந்தளவில் தயிர் சாதத்தையும் படையுங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் உருவாகும்.
கன்னி
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில்,குரு, சந்திரன் இணைந்து கெஜகேசரி யோகத்தை தந்தனர். முக்கியமாக வெளிநாட்டில் தொழில் தொடர்புகளும், வேலை வாய்ப்பும் தரும் யோகம் இது. ஜென்மத்தில் இராகு உள்ளார். தேவைக்கு அதிகமாக கடன் வாங்காதீர்கள். குடும்பஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால், இது நாள் வரையில் குடும்பத்தில் இருந்த குழப்பம் தீரும். கீர்த்தி ஸ்தானத்தில் சனி, சுக்கிரன் உள்ளனர். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. சுகஸ்தானத்தில் சூரியன் அமைந்ததால், கல்வியில் தடை ஏற்படுத்தச் செய்வார். இறைவன் அருளால், குரு பார்வை இருப்பதால் எப்படியும் கல்வியை தொடர்வீர்கள். பஞ்சமஸ்தானத்தில் புதன் இருக்கின்ற காரணத்தால், பூர்வீக சொத்தில் சிறு வாக்கு வாதம் உருவாகி பிறகு சுமுகமாகும். சப்தமஸ்தானத்தில் கேது அமைந்ததால், கூட்டு தொழில் விஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்காக கடன் ஏற்படும். சிவபெருமான் அருளால் சிறப்பான ஆண்டாக அமையும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் திங்கட் கிழமையில் ஈஸ்வரன் ஆலயத்திற்கு சென்று வில்வ இலையை சிவலிங்கத்திற்கு அணிவியுங்கள். விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் அணிவித்து வணங்குங்கள். ஒருவருக்காவது, உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் அன்னதானம் செய்யுங்கள். உங்களை வாட்டி வதக்கும் கஷ்டங்கள் விலகி இறைவனின் அருளால் நன்மைகள் தேடி வரும்.
  

துலாம்

அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், குரு, சந்திரன் இணைந்து லாபத்தில் உள்ளனர். ஆகவே, இந்த கெஜகேசரி யோகத்தால் முன்னேற்ற பாதைக்கு வழி தெரிந்து விட்டது. இனி யோக காலம்தான். தொழில் துறையில் மாற்றம் உண்டு. உத்தியோகத்தில் இடபெயர்ச்சி ஏற்படுத்தும். திருமணம் நடைபெற சாத்திய கூறு உண்டு. ஜென்ம இராசியில் செவ்வாய் இருப்பதால், உடல் நலனில் கவனம் தேவை. முன் கோபம் வேண்டாம். ஏழரை சனி உள்ளதால், குடும்பத்தில் சலசலப்பு ஏற்படுத்தும். ஆகவே மௌனம் தேவை. கீர்த்தி ஸ்தானத்தில் சூரியன் அமைந்த காரணத்தால், எடுத்த காரியத்தை போராடி நிறைவேற்றுவீர்கள். சுகஸ்தானத்தில் புதன் உள்ளார். கல்வியால் பலன் உண்டு. உறவினர் வருகையால் சிறு பிரச்னை உருவாக்கும். 6-ஆம் இடத்தில் உள்ள கேது பகவான், வழக்கில் சற்று இழுப்பறி தருவார். ஸ்ரீ ஆஞ்சனேயரின் அருளால் இந்த ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் சனிக்கிழமையில் சனிஸ்வர பகவான் சன்னதி சென்று எள் தீபம் ஏற்றுங்கள். காக்கைக்கு எள் சாதத்தை சனிக்கிழமைதோறும் வையுங்கள். ஸ்ரீ ஆஞ்சனேயர் கோயிலுக்கு சென்று உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய இறைவன் அருள் பரிவான்.
விருச்சிகம் 
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு 10-ஆம் இடத்தில் குரு, சந்திரன் இணைந்து, “கெஜகேசரி யோகம்” அமைந்ததால், மனமகிழ்ச்சி ஏற்படும். தடைகள் நீங்கும். பொன் – பொருள் சேரும். குடும்பத்தில் சுபகாரியம், திருமணம் நடைபெறும். தனஸ்தானமான இரண்டாம் இடத்தில், சூரியன் உள்ளார். இதனால், செலவுகள் அதிகம் ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை. விரயஸ்தானத்தில் செவ்வாய் அமைந்ததால், முன் கோபத்தை தரும். பஞ்சமஸ்தானத்தில் கேது உள்ளார். அயல்நாட்டுக்கு செல்லும் வாய்ப்பு வரும். தொழில்துறை வாய்ப்புகளும், உத்தியோகமும் அயல் நாட்டில் அமையலாம். உங்கள் இராசிக்கு லாபஸ்தானமான 11-ஆம் இடத்தில் இராகு இருப்பதால், அரசாங்க ஆதரவு கிடைக்கும். இது நாள் வரை இருந்த கடன் தொல்லை நீங்கும். சகோதர வர்க்கத்தால் சற்று மனக்கசப்பு வரலாம். ஆகவே சகோதர-சகோதரிகளிடம் பொறுமை தேவை. முருகன் அருளால் முன்னேற்றம் உண்டு யோகமான ஆண்டாக அமையும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் முருகப்பெருமானை வணங்குங்கள். செவ்வாய்க்கிழமையில் கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்யுங்கள். முருகப்பெருமானின் அருளால் முன்னேற்றம் கிடைக்கும்.
தனுசு 
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், குரு, சந்திரன் இணைந்து உங்களுக்கு கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், தடைபட்ட காரியங்கள் இனி தடை இல்லாமல் நடைபெறும். பொன், பொருள் வீடு, மனை அமையும். ஜென்ம இராசியில் சூரியன் உள்ளதால் உழைப்பு அதிகமாகும். தனஸ்தானத்தில் புதன் இருக்கிறார். குடும்ப செலவு அதிகமாகும். சுகஸ்தானத்தில் கேது அமைந்ததால், உடல் நலனில் கவனம் தேவை. உங்களுக்கு தற்போது விரய சனி நடைப்பெற்று வருகிறது. ஆகவே, யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம். லாபஸ்தானத்தில் செவ்வாய் உள்ளார். சோதனை எல்லாம் சாதனையாக மாற வாய்ப்புண்டு. சுபகாரியங்கள் நடைபெறும். 10-ஆம் இடத்தில் இராகு அமைந்து தொழில் துறையில் வளர்ச்சி கிடைக்க காரணமாக இருப்பார். வேலை வாய்ப்பு அமையும். ஆனாலும், கடன் சுமை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரணம் இப்போது உங்களுக்கு 7½ சனியில் விரய சனி நடக்கிறது. வம்பு வந்தாலும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வைரவர் அருளால் லாபமான ஆண்டாக இருக்கும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் வைரவர் சன்னதிக்கு சென்று வைரவரை வணங்குங்கள். வைரவருக்கு மிளகு தீபம் ஏற்றுங்கள். கஷ்டத்தை நீக்கி மகிழ்ச்சியானதாகவும், லாபகரமான ஆண்டாகவும் அமைய வைரவர் உங்களுக்கு அருள் புரிவார்.
மகரம் 
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். . இந்த 2016-ஆம் ஆண்டில்,அஷ்டமத்தில் குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், பல நாட்களாக இழுத்துக் கொண்டு வந்த சுபகாரியங்கள், சுபிட்சமாக நிறைவடையும். வாகன விருத்தி, வீடு அமையும் யோகம் அத்தனையும் நடைபெறும். உடன் பிறப்பால் பலன் உண்டு. லாபஸ்தானத்தில் சனி, சுக்கிரன் அமைந்ததால், படிப்படியாக வாழ்க்கை உயரும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். ஜீவனஸ்தானத்தில் செவ்வாய் இருக்கிறார். வியபாரம் வளரும். புதிய வருமானத்திற்கு வழி பிறக்கும். தடைபட்ட கல்வி தொடரும். கடன் சுமை குறையும். பாக்கியஸ்தானத்தில் இராகு உள்ளார். பூர்வீக சொத்தில் சற்று வில்லங்கம் ஏற்படுத்தும். வழக்கு இருந்தால் வெற்றி அடையும். விரயஸ்தானத்தில் உள்ள சூரியன், சற்று குடும்பத்தில் பிரச்னையை உருவாக்குவார். ஆகவே நிதானம் தேவை. சிவபெருமானின் அருளால் இவ்வாண்டு உங்களுக்கு அருமையான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் ஞாயிற்று கிழமையில், கோதுமையால் தயாரித்த உணவை தானம் செய்யுங்கள். ஞாயிற்று கிழமையில், சூரிய பகவானை வணங்குங்கள். சூரிய பகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை முறை உச்சரிக்கவும். பாதகங்களும் சூரிய பகவானின் அருளால் சாதகமாக மாறி உங்கள் வாழ்க்கையை ஜொலிக்க வைப்பார்.
கும்பம் 
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு சப்தமதில் குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை ஏற்படுத்தி தருவதால், தொட்டது துலங்கும். மண்ணும் பொன்னாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கான காரண காரியங்கள் உருவாகும். தனஸ்தானத்தில் உள்ள கேது பகவான், விரயங்களை அதிகரிப்பார். அஷ்டமத்தில் உள்ள இராகு விரோதத்தை தேடி தருவார். ஆகவே, எதிலும் கவனமாக இருக்க வேண்டும். பாக்கியஸ்தானத்தில் செவ்வாய் அமைந்த காரணத்தால், வீடு, மனை வாங்கும் வசதி கிடைக்கும். லாபஸ்தானத்தில் உள்ள சூரியன், கல்வி, தொழில்துறை, உத்தியோகம் இவற்றில் நன்மை ஏற்படுத்தும். விரயஸ்தான்த்தில் உள்ள புதன், உறவினர் வருகையால் சற்று செலவுகளை அதிகரிப்பார். உடல் நலனில் கவனம் தேவை. தாய்மாமன் விஷயத்தில் பொறுமை தேவை. தேவை இல்லாமல் குழப்பம் ஏற்படுத்தும். ஜீவனஸ்தானத்தில் சனி, சுக்கிரன் இருப்பதால் நன்மைகளும் தேடி வரும். ஸ்ரீதுர்கை அம்மனின் அருளால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் புதன்கிழமை தோறும் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று உங்களால் முடிந்தளவு நெய் தானம் செய்யுங்கள். திருக்கோயிலில் உள்ள விளக்குகள் நெய் தீப ஒளியில் மின்னட்டும். உங்கள் பொருளாதார வளர்ச்சியும் இதனால் அதிகரிக்கும். தோஷங்கள் விலகி வெற்றி கிட்டும்.
மீனம் 
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், நீங்கள் கண்ட கனவு பலிக்கும். விட்டது, விலகியது அனைத்தும் கைக்கு வந்தடையும். குடும்பத்தில் சுபகாரியம், திருமண விஷயங்கள் பிரமாதமாக நடைபெறும். பாக்கியஸ்தானத்தில் அமைந்துள்ள சனி, சுக்கிரன், புதிய கட்டடம் கட்டும் யோகத்தை தருவார்கள். பொன், பொருள் வாங்கும் பாக்கியம் கிடைக்கும். வீடு, மனை அமையும். உறவினர் வருகை அதிகரிக்கும். கடன்கள் தீரும். வேலை வாய்ப்பு அமையும். நசிந்த தொழில் நிமிர்ந்து நிற்க உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் யோகம் உண்டு. லாபஸ்தானத்தில் புதன் அமைந்திருப்பதால், நோய் நொடி நீங்கும். 10-ஆம் இடத்தில் அமைந்துள்ள சூரியன், மனமகிழ்ச்சியை வாரி வழங்குவார். பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சி பொங்க செய்யும் ஆண்டாக அமையும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் சிவப்பு மலர்களை அணிவித்து சூரிய பகவானை வணங்குங்கள். அத்துடன், உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில், சூரிய பகவானுக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவியுங்கள். உங்கள் வாழ்க்கை பிரகாசமாக ஜொலிக்கும்.

Share:

முஸ்லிம் அரசியல், சமூக தலைவர்கள் உள்ளடக்கிய பேரவை வேண்டும் கி.மா உறுப்பினர் சுபைர்'


இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அரசாங்கத்திடம் முன்வைப்பதற்காக முஸ்லிம் அரசியல் மற்றும் சமூகப்பற்றுள்ள தலைவர்களை உள்ளடக்கிய பேரவையொன்று உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
Share:

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாதுகாப்பு' - அலி ஸாஹிர் மௌலானா

இந்த நாட்டில் தேர்தல் முறை மாற்றம் செய்யப்படுவதை விட, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்ந்தும் இருப்பதே சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாதுகாப்பானதென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
Share:

இன ஐக்கியம் ஏற்பட விட்டுக்கொடுப்பு அவசியம் அமைச்சர் கி.துரைராஜசிங்கம்

தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்பட வேண்டுமாக இருந்தால், பரஸ்பர விட்டுக்கொடுப்பு அவசியமென கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

தெரிவுசெய்யப்பட்ட 70 மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்வு, ஏறாவூர் அல் முனீறா பாலிகா வித்தியாலயத்தில்  நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்
Share:

ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 340 பேருக்கு தண்டனை


மட்டக்களப்பு - ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடத்தில் வீதி விபத்துகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இருப்பினும்மதுபோதையில் வாகனங்களைச் செலுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்ற தண்டனைக்குட்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஏறாவூர் பொலிஸ் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.டபிள்யூ.சி.பீ.கே.டி.சில்வா தெரிவித்தார்.
Share:

மட்டகளப்பு – பொலன்னறுவை பிரதான பாதையின் போக்குவரத்து வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிப்பு

மட்டகளப்பு – பொலன்னறுவை பிரதான பாதையில் வெள்ளப்பெருக்கு காரணமாக, தற்போது போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் பெய்த மழை காரணமாகவே, இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லேவ, மனம்பிட்டிய இடையே உள்ள பிரதேசங்களில், வெள்ள நீரின் அளவு மூன்று அடி உயரத்தில் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எனினும் இன்றில் இருந்து மழையின் அளவு குறையும் என கால நிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.
Share:

மட்டு போதனா வைத்தியசாலைக்கு வருடமொன்றில் 1500 பேர் இரத்ததானம்

காத்தான்குடியில் இருந்து 1500க்கும் அதிகமானோர் வருடமொன்றில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரத்ததானம் செய்துவருகின்றனர் என டாக்டர் ஏ.எல்.சியாம் தெரிவித்தார்.
காத்தான்குடி இரத்ததானம் செய்வோர் சமூகம் எனும் அமைப்பை ஆரம்பிக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
காத்தான்குடியில் இரத்ததான முகாம்களை ஒழுங்கு செய்பவர்கள் சமூகசேவை அமைப்புகளாகும்.காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் சுமார் 10 க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் நீண்ட காலமாக பல சிரமங்களுக்கு மத்தியில் இரத்ததானத்தை தொடர்ந்து செய்துவருகின்றன.
இந்த அமைப்புக்களை உள்ளடக்கிய் ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டு பல விடயங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட வேண்டும் என்பது மிக நீண்டகாலமாக உணரப்பட்டவிடயமாகும் என்றார். இதன்போது பின்வரும் விடயங்கள் தீர்மானிக்கப்பட்டன.
காத்தான்குடியில் உள்ள அனைத்து இரத்ததானம் செய்வோர்கள் மற்றும் அதனை ஒழுங்குசெய்யும் அமைப்புகள் உள்ளடக்கியதான காத்தான்குடி இரத்ததானம் செய்வோர் சமூகம் ஒன்றினை ஆரம்பித்தல், காத்தான்குடி தளவைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படவுள்ள இரத்தவங்கிக்கான முடியுமான ஆதரவினை வழங்குதல், இரத்ததானம் செய்வோர்களின் சுகாதார நலன்கள் தொடர்பாக இலவச ஆலோசனைகளை வழங்குதல், தேசிய இரத்தவங்கி மற்றும் மட்டக்களப்பு இரத்த வங்கிகளுடனான தொடர்புகளை பேணிக்கொள்ளுதல், இரத்தம் வழங்குவோர், இரத்தம் தேவையானோர்களுடையான தொடர்புகளை இலகுவாக்க மற்றும் தேசிய, சர்வதேச தொடர்புகளை ஏற்படுத்த இணையத்தளம் ஒன்றினை உருவாக்குதல், இரத்ததானம் தொடர்பான விழப்புணர்வுகளை உள்ளூர், வெளியூர்களில் அதிகரிக்க முயற்சித்தல்,
இரத்ததான முகாம்களின் கால அட்டவணையினை தயாரித்தல், ஏனைய சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் பங்குகொள்ளுதல் போன்ற விடயங்கள் இங்கு தீர்மானிக்கப்பட்டன என்றார்.
Share:

மாற்றுத்தலைமை கிழக்கு மக்களுக்கு ஒரு போதும் விடிவை ஏற்படுத்தாது

தற்போதைய காலக்கட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு மாற்றீடாக எந்த அமைப்புகளைஉருவாக்கினாலும் அது கிழக்கு மாகாணத்திற்கு சாபக்கேடே என தமிழ்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.
அம்பிளாந்தறையில் உள்ள தமது அலுவலகத்தில் 26 மாலை தற்போதைய புதியமைப்பு யாழ்பாணத்தில் உருவாக்கப்பட்டமை சம்பந்தமாக ஆதரவாளர்கள் மத்தியில் பேசியபோது மேலும் கூறிய அவர். தற்போதைய நிலையில் ஒவ்வொரு தமிழ்மகனும் தமிழ்தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டுமே தவிர பலவீனப்படுத்தகூடாது.
தேர்தலில் இம்முறை நான் வெற்றிபெறவில்லை என்பதற்காக அல்லது தேசியபட்டியல் உறுப்புரிமை எனக்கு தரவில்லை என்பதற்காக அல்லது ஒருவர் இருவர்முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதற்காக நான் வேறு அமைப்புக்களில் இணைவதோ அல்லது தமிழ்தேசியகூட்டமைப்புக்கு எதிராகசெயல்படுவதோ எனது நோக்கமில்லை.
குறிப்பாக கிழக்கு மாகாணமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வேலைவாய்ப்பில் தமிழர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள். தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 75வீதமான தமிழர்கள் நிறைந்த மாவட்டத்தில் மாவட்ட இணைத்தலைவராக மூன்று முஸ்லிம் உறுப்பினர்களும் ஒரு தமிழரும் நியமிக்கப்பட்ட நிலையில் இன்னும் பல ஆபத்துக்களை எதிர்நோக்க வேண்டி வரும்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு எடுக்கும் அரசியல் தீர்வு விடயத்திற்கு குறிப்பாக கிழக்கில்உள்ள அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும்.அதை விடுத்து இன்னும் ஒரு மாற்றுத்தலைமைக்கு பின்னால் செல்வது கிழக்குத்தமிழர்களாகிய நாம் எமது தலையில் நாமே மண்ணை போடுவதற்கு ஒப்பாகும். வடமாகாணத்தை பொறுத்த மட்டில் இன்னும்பத்து வருடம் அரசியல் தீர்வு இல்லாமல் இப்படியே இருந்தாலும் அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை.
இதனால் யாரும் நான் பிரதேச வாதம் பேசுவதாக நினைத்தால் அது அவர்கள் மடமைத் தனமும் கிழக்கு மாகாணம் தொடர்பான சரியான விளக்கம் இல்லாதவர்களேயாகும்.கடந்த முப்பதுவருட அகிம்சைப் போராட்டகால அரசியலை தலைமையேற்றுநடாத்தியதந்தை செல்வாவாக இருக்கலாம் அதன்பின் ஆயுத அரசியல் போராட்டத்தை முப்பது வருடம் தலைமையேற்று வழிநடாத்திய பிரபாகரனாக இருக்கலாம் பல கட்டங்களில் அவர்களுக்கு கிழக்கு மாகாணத்தை விட்டு வடமாகாணத்தை மட்டும் எடுத்து தனியாக ஆட்சி செய்யுமாறு அந்தந்த காலக்கட்டங்களில் இருந்த சிங்கள தலைவர்கள் கேட்டபோதும் தாம்கிழக்கு மாகாணத்தை விட்டு எந்த தீர்வையும் பெறமாட்டோம் என உறுதியாக கூறி இருந்தனர். எப்போதும் வடக்கில் இருந்து கிழக்கு மாகாணம் பிரியக்கூடாது என்ற நிலைப்பாட்டின்
அடிப்படையில்தான் எமது தலைவர்கள் செயல்பட்டனர். தற்போது இராஜதந்திர அரசியல் தலைமையை ஏற்றுள்ள சம்பந்தன்ஐயாவும் வட, கிழக்கு இணைந்த அரசியல் தீர்வில் இருந்து தடம்மாறவில்லை. எதிர்வரும் 2016ம் ஆண்டு டிசம்பர் 31க்குள் அரசியல் தீர்வு கிடைக்கும் என உறுதியுடன் தமது செயல்பாட்டை முன் எடுக்கும்போது அதற்கு மாற்றீடாக வேறு ஒரு பெயரில் அமைப்புக்கள் ஏற்படுத்துவது இன்னும் காலத்தை இழுத்தடிக்குமே தவிர அதனால் அடையும் லாபம் அரசாங்கத்திற்கு லாபமாகமட்டும் இருக்கும். எமக்கு எந்த நன்மையும் ஏற்படாது.
Share:

 நீதவானின் காரின் மீது கல் வீசிய 4 பேர் கைது

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் கடந்த திங்கட்கிழமை (28) நீதவான் ஒருவரின் காரின் மீது கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் 04 சந்தேக நபர்களை புதன்கிழமை (30) மாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
Share:

காடழிப்பு, மணல் அகழ்தல் தொடர்பில் முறைப்பாடு செய்யமுடியும் - மட்டு. மாவட்ட மேலதிக அரச அதிபர்

மட்டக்களப்பு  மாவட்டத்தில் சட்டமுரணான முறையில் காடுகளை அழித்தல், அனுமதிக்கப்படாத இடங்களில் அனுமதிக்கப்படாத நேரங்களில், அனுமதிக்கப்படாத அளவுகளில்  மண் மற்றும் கிரவல் அகழ்தல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு முறைப்பாடுகளைச் செய்யமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மண் மற்றும் கிறவல் அகற்றுதல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் விடுத்துள்ள இவ் அறிவித்தலில், மட்டக்களப்பு  மாவட்டத்தில் பிரதி அமைச்சர், கிழக்கு மாகாண சபை அமைச்சர், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகளுக்கமைவாக மண் மற்றும் கிறவல் அகற்றுதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

சூழல் சுற்று நிருபத்திற்கு அமைவாக மண் மற்றும் கிறவல் அகற்றுவதற்கான மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உட்பட புவிச்சரிதவியல் அளவைசுரங்கங்கள் பணியகப் பிரதிநிதி, வனப்பாதுபாப்பு திணைக்களப் பிரதிநிதி , மத்திய சுற்றாடல் பிதிநிதி மற்றும் பொலிஸ் திணைக்களப்பிரதிநித் உட்பட குழு ஒன்று மேற்படி விடயங்களைக் கண்காணிக்கவென நியமிக்கப்பட்டு மாவட்ட குழு நியமிப்பதற்கு ஏதுவாக குழு உறுப்பினர்கள் பெயர் விபரங்கள் சிபார்சு செய்யப்பட்டு செயலாளர் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த அமைச்சினால் மேற்படி குழு நியமனம் மேற்கொள்ளப்படும்.

பிரதேச செயலக மட்டத்தில் பிரதேச செயலாளரை தலைவராகக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் விண்ணப்பங்களை குறித்த குழு பரிசீலித்து அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக புவிச்சதிரவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்திற்குச் சிபார்சு செய்யும். ஜனாதிபதியின் செயலாளரது பி.சி.எம்.டி/டிசிசி/பொது இலக்க 08.12.2015 ஆம் திகதிய கடிதத்தின்படி வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீளக்குடியேறுதல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் உட்பட எந்தவொரு நடவடிக்கைக்கு காடுகளை அழிக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே சட்ட முரணாண முறையில் காடுகளை அழித்தல் அனுமதிக்கப்படாத இடங்களில், மற்றுமு; அனுமதிக்கப்படாத அளவுகளில், அனுமதிக்கப்படாத நேரங்களில், மண் மற்றும் கிறவல் அகழ்தல் போன்றவற்றால் நீர்ப்பாசன நடவடிக்கைகள் மேய்ச்சல் தரைக் காணிகள், நீர் வடிகான்கள் பாதைகள் என்பன பாதிக்கப்படுவதை தடுக்குமுகமாக இவை தொடர்பான முறைப்பாடுகளை பொது மக்கள் மேலதிக அரசாங்க அதிபரின் 065 2222236 இலக்கத்திற்குத் தெரிவிப்பதுடன் 0652224466 என்னும் தொலை நகல் இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும் முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

மட்டக்களப்பு வாவியில் ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு மட்டிக்கழியில் உள்ள வாவியில் இருந்து நேற்று புதன்கிழமை மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
Share:

கிழக்கு மாகாண பண்பாடடலுவல்கள் திணைக்களத்தின் பன்மைத்துவ கலாசார நிகழ்வு - 2015

(திலக்ஸ்)
கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பன்மைத்துவக் கலாசார நிகழ்வு 2015.12.29 அன்று திருமலை சென் மேரிஸ் தேசிய பாடசாலை கலையரங்கில் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளா் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவா்களின் தலைமையில் இடம்பெற்றது.
Share:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக இறுதி தீர்வை பெற அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் - ஜனா

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடாக நமது மக்களுக்கான இறுதித்தீர்வை நாங்கள் பெற வேண்டும். அதற்கு அனைவரும் அரசியல் ரீதியாக ஒத்துழைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்தார்.
Share:

புதன், 30 டிசம்பர், 2015

மட்டக்களப்பில் பிரபல உணவகம் ஒன்றின் உணவில் கரப்பான் பூச்சி –வழக்கு தாக்கல்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட உணவகங்கள் தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகர்களும் பல்வேறு நடவடிக்கைகளையும் எச்சரிக்கையினையும் விடுத்துவருகின்றனர்.
Share:

ஸ்ரீ ரமண மகரிசியின் 136ஆவது ஆண்டு ஜெயந்தி விழாவும் சபரிமாலை பாதயாத்திரை குழுவினரின் இறுதி மண்டல பூஜையும்

பகவான் ஸ்ரீ ரமண மகரிசியின் 136ஆவது ஆண்டு ஜெயந்தி விழாவும் சபரிமாலை பாதயாத்திரை குழுவினரின் இறுதி மண்டல பூஜையும்  மட்டக்களப்பு ஏறாவூர் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
Share:

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான சந்தேக நபர்களான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும்  சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட  சந்தேக நபர்களான மூவரும் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு  நீதவான்  நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் படுத்தப் பட்ட போது எதிர்வரும்   எதிர்வரும்  13ம் திகதி வரை   விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
Share:

செவ்வாய், 29 டிசம்பர், 2015

நாவிதன்வெளியில் மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் மீட்பு.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் .ஏ.எல்.அலாவுதீன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று (28) நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவிலுள்ள 18 உணவகங்கள் சுப்பர் மார்க்கட் போன்றன திடீர் பரிசோதனை செய்யப்பட்டது.

இப்பரிசோதனையில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்.து.மதன் கல்முனை பிராந்திய உணவு மருந்து பரிசோதகர்களான என்.தேவநேசன் , ரி.தஸ்தகீர் , மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.இளங்குமரன் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது சுமார் 60,000 ரூபா பெறுமதியான மனித பாவனைக்கு உதவாத பொருட்கள் கைப்கற்றப்பட்டு அழிக்கப்படடதாகவும் மற்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கல்முனை பிராந்திய உணவு மருந்து பரிசோதகர் என்.தேவநேசன் தெருவித்தார்.
Share:

பெரிய போரதீவு வீதியின் நடுவே உள்ள பள்ளத்தில் முதலை அதிகாரிகளின் கவனத்திற்கு

(பழுவூரான்)

மட்டு மாவட்டத்தில் அண்மைக்காலமாக பெய்து வரும் மழை காரணமாக பட்டிருப்பு – பழுகாமம் வரையிலான பிரதான வீதிகள் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வீதியானது வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமானதெனவும், இவ்வீதியின் நிலையினை அனைத்து ஊடகங்கள் மூலமாகவும் அனைவருக்கும் தெரிவித்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இவ் அதிகாரிகளும் அரசாங்கமும் செயற்படுகின்றமை மிகவும் மனவேதனை அளிப்பதாக பெரியபோரதீவு மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதனுடைய பிரதிபலிப்பே RDD , RDA மற்றும் பிரதேச சபையின் கவனத்திற்கு இக்குளத்தில் முதலைகள் உண்டு கவனம்' எனும் வாசகம் பொறிக்கப்பட்ட ஒரு பலகை வீதியின் நடுவே நடப்பட்டடுள்ளது. இதனை மீண்டும் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் மக்கள் தெரிவிகின்றனர். 

Share:

ரி.எம்.வி.பி.பொதுச்செயலாளர் பிரசாந்தனுக்கு மீண்டும் விளக்கமறியல்

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் 2008ம் ஆண்டு இடம் பெற்ற இரட்டைக் கொலை தொடர்புடைய சந்தேக நபர்களான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பொதுச்செயலாளர் உட்பட இரு சந்தேக நபர்கள் மீதான விளக்கமறியல் தொடர்ந்தும் இரு வாரங்களுக்கு மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.
Share:

மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பில் இருந்து தமிழர் பேரவையுடன் இணைந்தவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது

வடக்கில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினை முறையான வகையில் இணைக்காதது கவலைக்குரிய விடயம் என தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா,மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பில் இருந்து நிர்வாக சபையின் அனுமதியின் சென்றவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Share:

பிராந்திய நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு விழா

(எம்.எஸ்.சம்சுல் ஹாதா)

கிழக்கு மாகாண அம்பாறை பிராந்திய நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு விழா  மாகாண நீர்ப்பாசன அம்பாறை பிராந்திய பணிப்பாளர் எந்திரி யு.எல்.ஏ.நசார் தலமையில் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

2016ம் ஆண்டில் இடமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் பொருட்டு இன்று இடம்பெற்ற இந்நிகழ்வில் 05 வருடங்களை பூர்த்தி செய்த மற்றும் வருடாந்த இடமாற்றத்தின் அடிப்படையில் வேறு திணைக்களங்களுக்கும், பிராந்திய அலுவலகங்களுக்குள்ளும் இடமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களின் அயராத சேவையினை கௌரவித்து இடம்பெற்ற நிகழ்வில் அவர்களது கடந்த கால சேவைகள் பற்றியும், திறமைகள் பற்றியும் கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிராந்திய அலுவலக பொறியியலாளர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
Share:

திங்கள், 28 டிசம்பர், 2015

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாவிகளுக்கு எல்லையிடும் நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாவிகளுக்கு எல்லையிடும் நடவடிக்கை இடம் பெற்றுவருவதாக கரையோரம் பேணல் திணைக்களத்தின் திட்டமிடல் உத்தியோகத்தர் ஜி.மக்கில் தொிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாவிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையினை தடுக்கும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் ஆசோனையுடனும் வழிகாட்டலிலும் கரையோரம் பேணல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.கோகுலதீபனின் கண்கானிப்பின் கீழ் இந்த எல்லையிடும் நடவடிக்கை இடம் பெற்றுவருவதாக அவர் மேலும் கூறினார்.

இபாட் நிறுவனத்தின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் 9 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 128 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள 360 கிலோ மீற்றர் தூரத்தினைக் கொண்ட அளவில் இந்த எல்லையிடும் நடவடிக்கை இடம் பெற்றுவருகின்றது.

இந்த திட்டத்தின் கீழ் வாவியின் கரையிலிருந்து 3மீற்றருக்கு உயரமான தூண்களை நிறுவி இந்த எல்லைகளை அடையாமிடும் நடவடிக்கை இடம் பெற்றுவருகின்றது.

இந்த நடவடிக்கை மூலம் வாவிகள் சுவீகரிக்கப்படுவதை தடுப்பதுடன் வாவிகளின் கரையோரங்களை பேணவும் முடியும்.
இந்த திட்டத்தின் கீழ் காத்தான்குடி வாவியில் எல்லையிட்டு முடிவடைந்துள்ளதாகவும் தொடர்ந்து இந்த நடவடிக்கை இடம் பெற்றுவருவதாகவும் அவர் மேலும் தொிவித்தார்.
Share:

புதிய நகரத் திட்டத்தை எதிர்த்து கல்முனையில் ஆர்ப்பாட்டம்

அம்பாறை மாவட்டம் கல்முனையில் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய நகரத் திட்டத்தை எதிர்த்து கல்முனையில் இன்று திங்களன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பமாகி கல்முனை மாநகர சபை முன்றலில் மகஜர் கையளிப்போடு முடிவடைந்தது. 

அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கமும், விவசாயிகள் அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் உத்தேச புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தினால் பாதிக்கப்படக் கூடிய பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். 

´வாழ்வாதாரத் திட்டங்களை அழிக்கும் புதிய நகர மயமாக்கல் திட்டத்தை எதிர்க்கிறோம்´ என எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு ஆர்பாட்டம் இடம்பெற்றது. 

´இத்திட்டம் இங்கு வாழும் மூவின மக்களிடையே சமூக கலாச்சார பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும், விவசாயத்தை நாசம் செய்யும், அரிய வகை மீனினங்கள், பறவைகள், உயிர்ப் பல்வகைத் தன்மை அழிந்து போகும், பாரிய வரலாற்றுக் கிராமமான துரவேந்தியமடு கிராமம் அழிந்து போகும், 1059 குடும்பங்களைச் சேர்ந்த நன்னீர் மீனவர்களது வாழ்க்கை கேள்விக் குறியாகும்´ போன்ற விடயங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் துண்டுப் பிரசுரமாக விநியோகித்தனர். 

தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஆர்ப்பாட்ட ஏற்பாட்டுக் குழுவினர் கல்முனை முஸ்லிம் பிரிவு பிரதேச செயலாளர் முஹம்மத் கனி, மற்றும் கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலாளர் ஏ. லவநாதன், கல்முனை மாநகர சபை தலைமை இலிகிதர் நளீம்.எம்.பதூர்தீன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மாகாண சபை உறுப்பினர் ரீ. கலையரசன், டெலோ இயக்க பொதுச் செயலாளர் ஹென்றி மஹேந்திரன் ஆகியோரிடம் கையளித்தனர். 
Share:

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate