திங்கள், 2 நவம்பர், 2015

திகிலிவட்டையில் கிணறில் வீழ்ந்து யுவதி பலி

மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலடங்கும் திகிலிவெட்டைக் கிராமத்திலுள்ள விவசாயக் கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


ஞாயிற்றுக்கிழமை காணாமல்போன கோரகல்லிமடு - இலுப்பையடி முன்மாரி கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி சுலோஜனா (வயது 18) என்ற யுவதியே திங்கள் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டிலிருந்து காணாமல் போனவரைத் தேடிப் பார்த்தபோது அவர் விவசாயக் கிணறு ஒன்றில் சடலமாக மிதக்கக் காணப்பட்டதையடுத்து பொலிஸாருக்குத் தகவல் அறிவிக்கப்பட்டதின் பேரில் பொலிஸார் ஸ்தலத்துக்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1625158

Translate