புதன், 19 ஆகஸ்ட், 2015

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவேன் -அமல் (வீடியோ இணைப்பு)

தமிழ் மக்களுக்கும் தமிழ் தேசியத்திற்கும் என்றும் சேவையாற்றுபவர்களாக இருப்போம் என மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வெற்றிபெற்றுள்ள எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.


தமிழ் மக்கள் தம்மீதும் தமது கட்சி மீதும் கொண்ட பற்றுக்காரணமாக அணிதிரண்டு வாக்களித்துள்ளதாகவும் அவர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்திசெய்யும் வகையில் செயற்படுவேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து புதுமுகவேட்பாளராக களமிறங்கியிருந்தேன்.இதற்கு களம் ஏற்படுத்திதந்த தலைவர் சித்தார்த்தனுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.

தமிழ் மக்கள் மட்டக்களப்பில் எனக்கு அமோக ஆதரவினைதந்து வெற்றிபெறச்செய்துள்ளார்கள்.நாங்கள் அந்த மக்களுக்கு நன்றிகூறுவது மட்டுமன்றி அவர்களுக்கு சேவையாற்றுவேன்.

எதிர்காலத்தில் கிராமம் கிராமமாக சென்று மக்களோடு மக்களாக இணைந்து அவர்களோடு இணைந்து செயற்படும் ஒருசேவகனாக செயற்படுவேன்.அமோக ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

வீடியோவை பார்வையிட இங்கு அழுத்தவும்















Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624968

Translate