சனி, 5 டிசம்பர், 2015

ஐரோப்பிய ஒன்றியத்தின் வீடுகளில் கணிசமானவை கிழக்கு மாகாணத்தில்

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்ஸ்தானிகரும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வதிவிட பிரதிநிதியான டேவிட் டாலி மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் ஆகியோருக்குமிடையிலான சந்திப்பு  கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது .
கிழக்கு மாகாணத்தில் கழிவு முகாமைத்துவம் தொடர்பான வேலைத்திட்டத்திற்கு உதவி வழங்குவதுடன் ஐரோப்பிய ஒன்றியம் இம்முறை இலங்கைக்கு ஒதுக்கிய 500 கோடி ரூபாவில் கிழக்கு மாகாண அபிவிருத்தி வேலைத்திட்டதிற்காக 150 கோடி ரூபாவை வழங்குவதாகவும் அவர் இக்கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.
அத்துடன் வடகிழக்கில் ஐரோப்பிய ஒன்றியம் அமைத்து கொடுக்கவுள்ள 3000 வீடுகளில் கணிசமான வீடுகளை கிழக்கு மாகாணத்திற்கு வழங்கவுள்ளதாகவும் டேவிட் டாலி முதலமைச்சரிடம் தெரிவித்தார் .
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1625150

Translate