புதன், 9 டிசம்பர், 2015

திருகோணமலை கட்டைப்பறிச்சான் விபுலானந்த வித்தியாலய மகரம் ஆற்றுகைப்புலம் அங்குரார்ப்பண விழாவும் குறும்பட வெளியீடும்

திருகோணமலை கட்டைப்பறிச்சான் விபுலானந்த வித்தியாலய மகரம் ஆற்றுகைப்புலம் அங்குரார்ப்பண விழாவும் குறும்பட வெளியீடும் கடந்த  03.12.2015 அன்று வெகு கோலாகலமாக வித்தியாலய மகரம் ஆற்றுகை அரங்கிலேநடைபெற்றது.  இந் நாடக மன்றமானது 3 மாத காலமாக நாடக பட்டறைமூலம் தெரிவுசெய்யபட்ட மாணவர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வித்தியாலய அதிபர் திரு.பு.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அதிதிகளாக கட்டைப்பறிச்சான் கிராமோதய சபை முன்னாள் தலைவரும் சமூக சேவையாளருமான கோ.இரத்தினசிங்கம் அவர்களும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கு.நகுலேஸ்வரன் அவர்களும் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் திரு.அ.திருஞானம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும்  திருகோணமலை மாவட்ட அகம் அபிவிருத்தி நிறுவக உத்தியோகத்தர்களும் கட்டைப்பறிச்சான் கிராம சேவகர்களும் அத்துடன் கலாபூசணம் திரு .ச.செல்வநாயகம் ஐயா, பொலி சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் திரு பு.ஜெயாகரன்அவர்களும் மூதூர் வலய சக பாடசலை அதிபர்களும் கலந்து சிறப்பித்தனர்

இதன்போது மகரம் ஆற்றுகையாளர்களின் படைப்பாக "நெஞ்சுறுத்தும் கானல் " , "தேவலோக யானை" எனும் மேடை நாடகங்களும், "வடு"குறுந்திரைப்படமும் அரங்கேறியமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வினை மேலும் சிறப்பிக்கும் முகமாக பேராசிரியர் சி.மெளனகுரு அவர்களினதும் , கிழக்கு பல்கலைக்கழக முன்னால் பிடாதிபதி பாலசுகுமார் அவர்களதும் வாழ்த்து செய்திகளும் திரையிடப்பட்டன.

மேலும் மதிப்பிளித்தல் எனும் நிகழ்வானது கடந்த மூன்று மாத காலமாக மாணவர்களின் கலை ஆர்வத்தினை விருத்தி செய்து அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்திய , மகரம் ஆற்றுகைப்புலத்தின் ஸ்தாபகரும் விருட்சம் அரங்க படைப்பாளிகளின் ஸ்தாபருமான திரு.பண்டரிநாதன் ஜனோபன் அவர்களிற்கு பாடசாலையின் அதிபராலும் பாடசாலை சமூகத்தினராலும் பொன்னாடை போர்த்தி பாராட்டுமடல் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate