திங்கள், 26 அக்டோபர், 2015

புதிய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் கடமையை பொறுப்பேற்றார்


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிழக்கு  மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய சமூக சேவைகள், சிறுவர் நன்னடத்தை மற்றும் கிராமிய, மின்சார அமைச்சராக  திங்கட்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில்  இவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த மன்சூர் நடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டதை அடுத்து,  ஏற்பட்ட வெற்றிடத்துக்கு  ஏ.எல்.எம்.நஸிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன்  நஸீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி மற்றும் சுதாதார அமைச்சின் செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate