செவ்வாய், 27 அக்டோபர், 2015

போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் தொடர்பில் தகவல் வழங்கவும் : கல்வியமைச்சு

பாடசாலைகளுக்கருகில் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு, கல்வியமைச்சு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு சிறுவர் பாதுகாப்பு வாரம் ஒன்றை அனுஷ்டிப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ள நிலையில், இவ்வாறான செயற்பாடுகள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன.

‘பிரகாசமான சிறுவர் உலகிற்கு பாதுகாப்பான நாளை’ என்ற தொனிப்பொருளில், எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் இந்த சிறுவர் பாதுகாப்பு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதன்போது, பாடசாலை மட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், பாடசாலை சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களை இலக்குவைத்தே போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து தகவல் வழங்குமாறு கல்வியமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1625158

Translate