எந்தவொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் கல்வித் துறையின் பங்களிப்பு இன்றியமையாததாகும். அந்தவகையில் இலங்கை எதிர்நோக்கும் மாபெரும் சமுக பிரச்சனையானது எளிமையானதொரு தலைப்பினுள் உள்ளடங்கியுள்ளது. தகுதிவாய்ந்த தொழிலாளர்களின் பற்றாக்குறை ஒருபுறமும், மறுபுறம் கல்வித் துறையிலான முதலீடு மற்றும் ஆளணிப் பற்றாக்குறை என அது அமைந்துள்ளது. எனினும், அண்மைய everjobs இலங்கை தொழில் அறிக்கையிலிருந்தான தரவுகளின் படி தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் விருத்தி துறைக்கு அடுத்தபடியாக கல்வித் துறையில் அதிகளவு வேலை வாய்ப்புகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இணைய தளத்தினூடாக கடந்த 03 மாத காலப்பகுதியில் பட்டியலிடப்பட்ட தொழில் வாய்ப்புகளுக்கு கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் தரவுவிபரங்களை தொழில்வாய்ப்பு கணிப்புகளுடன் ஒப்பிடும் கவனக் குழுக்களின் சிபாரிசுகளுக்கு அமைவாகவே இந்த தொழில் அறிக்கையானது தயாரிக்கப்பட்டுள்ளது.
'கல்வித் துறையிலான வேலை வாய்ப்புகள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் விருத்தி, நிதியியல் சேவைகள், ஆடை அணிகலன்கள், ஹோட்டல் மற்றும் களியாட்டங்கள் துறைகளைக்கு இணையாக மென்மேலும் அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.' ஏன everjobs இலங்கை முகாமைத்துவ பணிப்பாளர் நீல்ஸ் வண் குளுஸ்டர் தெரிவித்தார் 'புதிய உள்நாட்டு மற்றும் சர்;வதேச தனியார் கல்வி நிறுவனங்களின் அறிமுகம் மற்றும் விரிவுரையாளர்/பயிற்றுநர், கல்வி நிர்வாகி மற்றும் மாணவர் ஆலோசகர் போன்ற நிலைகளுக்கான அதிகரிக்கும் சம்பளங்கள் இதற்கான முக்கிய காரணங்களாக அமைகின்றன.' என நீல்ஸ் மேலும் தெரிவித்தார்.
முன்னணி சர்வதேச தனியார் கல்வி நிறுவனமொன்றின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் 'உலகளாவிய ரீதியில் கல்வித்; துறையானது பாரிய அளவில் அயலாக்கத்தினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் கல்வித் துறையிலான தொழில் வாய்ப்புகளை எதிர்பார்க்கும் தொழில்தேடுநர்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மனிதவள மேலாண்மை துறைகளில் மேலதிக தகைமைகளை கொண்டிருக்க வேண்டியது அவசியம்.' என்றார்
everjobs பற்றி
everjobs இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், கம்போடியா, கமரூன் , செனகல் , எத்தியோப்பியா, தன்சானியா, ஐவரிகோஸ்ட் மற்றும் உகண்டா போன்ற நாடுகளில் இயங்கும் ஒன்லைன் தொழில் தளமாகும்.
2015 மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த தளமானது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் முன்னணி தொழில் தளமாக திகழ எதிர்பார்த்துள்ளது. தொழில் வழங்குநர்கள் மற்றும் விண்ணப்பதாரிகளுக்கு சிறந்த பொருத்தமான தெரிவாக அமைந்துள்ள இந்த தொழில் தளமானது ஆசிய பசுபிக் இன்டர்நெட் குழுமத்தின் பின்புலத்தை கொண்டுள்ளது.
ஊடக தொடர்புகளுக்கு
Erik Deoul Raj
PR & Marketing Manager, Everjobs Sri Lanka
+94 77 328 0331/ +94 11 406 2598
erik.deoulraj@everjobs.lk
0 facebook-blogger:
கருத்துரையிடுக