வெள்ளி, 23 அக்டோபர், 2015

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரை 72 மணித்தியாலங்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் எதிர்வரும் திங்கட்கிழமை வரை 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது, இவரை மூன்று நாட்களுக்குத் தடுப்புக்காவில் வைக்க நீதவான் அனுமதி வழங்கியதாக காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.
2008 ஆம் ஆண்டின் டிசம்பர் 13 ஆம் திகதி இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவமொன்று தொடர்பில் சந்தேகத்தின்பேரில் பிரசாந்தன் காத்தான்குடி பொலிஸாரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரை மூன்று நாட்களுக்குத் தடுத்துவைத்து விசாரிக்க அனுமதியளிக்குமாறு பொலிஸார் கோரிய நிலையிலேயே மட்டக்களப்பு நீதவான் அதற்கு அனுமதியளித்துள்ளார்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate