ஞாயிறு, 11 அக்டோபர், 2015

புலி பிடிக்கும் காலத்தில் படையெடுக்காதவர்கள்,கோழி பிடிக்கும் காலத்தில் படையெடுக்கின்றனர் –சந்திரகாந்தன்

புலி பிடிக்கும் காலத்தில் படையெடுக்காத இன்றைய அரசாங்கம் கோழி பிடிக்கும் காலத்தில் படையெடுப்பதாகவும் இதுதான் இன்றைய நல்லாட்சி எனவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை கொழும்பு குற்றப்புலனாய்வுப்பிரிவுக்கு விசாரணைக்காக செல்லும்போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நான் மட்டக்களப்பிலேயே இருந்தேன்.எனக்கு தகவல் தந்திருந்தால் நான் விசாரணைக்கு சமூகமளித்திருப்பேன்.அதனை விடுத்து எனது அம்மாவின் வீட்டினை சுற்றிவளைத்து அவரை தொந்தரவுபடுத்தவேண்டிய தேவையில்லை.

புலி பிடிக்கும் காலத்தில் படையினை அனுப்பாத இந்த அரசாங்கம் இன்று கோழியை பிடிப்பதற்கு படை அனுப்புகின்றது.இதைத்தான் இன்று நல்லாட்சி என்று சொல்கின்றார்கள்.



Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624992

Translate