ஞாயிறு, 14 ஜூன், 2015

மட்டக்களப்புக்கு இலங்கை உதைபந்தாட்ட சங்க தலைவர் விஜயம்

இலங்கையின் உதைபந்தாட்டத்துறையினை சர்வதேசத்தில் முதல்தரத்திற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் அநுர டி சில்வா தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் அழைப்பினை ஏற்று மட்டக்களப்புக்கு வருகைதந்த அவர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

நேற்று மட்டக்களப்பு கூட்டுறவு நிலையத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் கே.உதயகுராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் உதைபந்தாட்டத்துறை வளர்ச்சி தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக அவர் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தினால் இலங்கை உதைபந்தாட்ட சங்க தலைவர் கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வில் இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தினை சேர்ந்தவர்களும் மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சங்க செயலாளர் ரி.காந்தன் உட்பட விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.







Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate