சனி, 13 ஜூன், 2015

பழுகாமத்தில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழுகாமத்தல் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.


பழுகாமம் காந்திபுரம் சந்தியில் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது முச்சக்கர வண்டி சாரதியும் அதில் பயணித்த இருவரும் மோட்டார் சைக்கிளை செலுத்திவந்தவரும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பிலான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624982

Translate