வியாழன், 1 அக்டோபர், 2015

கல்முனையில் பிரதீபா பிரபா விருதுக்கு 03 அதிபர்கள் தெரிவு

கல்முனை கல்வி வலயத்தில் இவ்வருடம் பிரதீபா பிரபா விருது பெறுவதற்கு 03 அதிபர்களும் 09  ஆசிரியர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கல்முனை உவெஸ்லி கல்லூரி அதிபர் வே.பிரபாகரன், பாண்டிருப்பு நாவலர் வித்தியாலய அதிபர் ஜே.டேவிட், மாளிகைக்காடு  அல்-ஹுசைன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நளீர் ஆகியோரே தெரிவு செய்யப்பட்டவர்களாவர் . இவர்களுக்கான விருது வழங்கும் வைபவம் செவ்வாய்க்கிழமை (06) பண்டார நாயக்க  ஞாபகார்த்த  சர்வதேச  மாநாட்டு மண்டபத்தில் நடை பெறும். இவ்வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1625177

Translate