திங்கள், 19 அக்டோபர், 2015

வீடமைப்பு அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபன வங்கியின் புதிய கட்டிட திறப்பு விழா .

 ( லியோன் )   

மட்டக்களப்பு வீடமைப்பு அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபன வங்கி   கிளை முகாமையாளர் பாக்கியராஜா ராஜராஜன் தலைமையில்  மட்டக்களப்பு இலக்கம் ,601,Aதிருகோணமலை வீதியில்  இன்று காலை 10.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் வீடமைப்பு அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபன வங்கி பணிப்பாளர்  ஆர் .ஜெ .டி . சில்வா , வீடமைப்பு அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபன வங்கி பிரதம நிறைவேற்று அதிகாரி நிமால் மாமடுவ , சந்தைப்படுத்தல் உதவி பொது  முகாமையாளர்  திருமதி .ஆர் .இமாளி குணதிலக்க , வங்கி பிராந்திய முகாமையாளர் ஆர் .எம் .சுகத பால , வங்கி சந்தைப்படுத்தல் முகாமையாளர்  கமல் பெரேரா மற்றும் வங்கி உத்தியோகத்தர்கள்வங்கி வாடிக்கையாளர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர் .

இன்று திறந்து வைக்கப்பட்ட வீடமைப்பு அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபன வங்கி ஊடாக  நிலையான சேமிப்பு கணக்கு ,தனி நபர் கணக்கு ,வீட்டுக்கடன் வசதிகள் ,நுண்கடன் வசதிகள் , கால்நடை உற்பத்தியாளர்களுக்ககான கடன் வசதிகள் , வாகன குத்தகைக்கடன் , ஊழியர் சேமலாப நிதிக்கடன் ,சௌபாக்கியா  சிறிய நடுத்தரமான முயற்சியாளர்களுக்கான கடன் , சிறுவர் சேமிப்பு (அரும்புகள் ) முதியோர்களுக்கான ஒய்வூதியக்கடன் போன்ற  கொடுக்கல் வாங்கல்  நடவடிக்கைகள்  இந்த வங்கி ஊடாக  இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது .





















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate