புதன், 10 ஜூன், 2015

வறுமையற்ற நிலைமை உருவாக்கும் செயல் திட்டம்

மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவக அனுசரணையில்  வலுவற்ற மக்களின் மனித மாண்பை மேம்படுத்தி வறுமையற்ற நிலைமை உருவாக்கும் செயல் திட்டம் தற்போது நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றது.


இச்செயல்திட்டத்தின் கீழ் மண்முனை வடக்கு மற்றும் காத்தான்குடி பிரதேச செயலகங்களில் உள்ள இளைஞர் குழுக்களை திறன் அபிவிருத்தியில் மேம்படுத்தி வளப்படுத்தும் நோக்கத்துடன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இதன் செயல் திட்டத்தின் கீழ் இன்று மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில்  வளவாளர் ஆர் ,அன்பழகன் குருஸ் தலைமையில் முன்மொழிவு தயாரிப்பு மூலோபாய திட்டமிடல் என்னும் தலைப்பில் பயிற்சி நெறி மண்முனை வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் உள்ள இளைஞர் கழக அமைப்புக்களின் அங்கத்தவர்களுக்கும் மற்றும் காத்தான்குடி றபாளியா இளைஞர் கழக அங்கத்தவர்களுக்கும் இப்பயிற்சிகள் வழங்கப்பட்டது.









Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate