புதன், 23 செப்டம்பர், 2015

மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலனற்றோர் நிறுவனத்தின் 15வது ஆண்டு நிறைவு நிகழ்வு –பங்குபற்ற அழைப்பு

மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 15வது ஆண்டு நிறைவு தினமும் உலக செவிப்புலனற்றோர் தினமும் சிறப்பாக அனுஸ்டிக்கப்படவுள்ளது.


எதிர்வரும் சனிக்கிழமை(26) காலை 9.00மணியளவில் திருமலை வீதியில் உள்ள செல்வநாயகம் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் போசகர் கே.பிரதீபன்(சனா)தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள செவிப்புலன் வலுவற்றவர்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக கடந்த 15வருடமாக மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனம் அர்ப்பணிப்பு மிக்க சேவையினை ஆற்றிவருகின்றது.

அன்றைய தினம் நிறுவனத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளதாக நிறுவனத்தின் போசகர் பிரதீபன் தெரிவித்தார்.

இதேநேரம் இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 18வயதிற்கு மேற்பட்ட காதுகேட்காத, வாய்பேசமுடியாத அனைவரையும் பங்குபற்றுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(27) மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் அங்கத்தவர்களுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வு ஒன்றும் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் காலை 8.00மணி முதல் மாலை 5.30மணி வரை இந்த விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்தனர்.

கதிர்கள் அமைப்பின் அனுசரணையுடன் நடைபெறவுள்ள இந்த விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜாவும் மாலை பரிசளிப்பு நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமாரும் கலந்துகொள்ளவள்ளனர்.

இதன்போது நடைபெறும் விளையாட்டு நிகழ்வு மற்றும் வேறு தகவல்கள் தேவைப்படுவோர் கதிர்கள் அமைப்பின் இயக்குனர் அருள்பிரகாசத்தினை 0773489418 என்னும் இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624832

Translate