ஐ.நா.வினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் இலங்கையில் இறுதிக்கட்டத்தில் நடந்த போருக்கு சர்வதேச விசாரணை தேவை,அது கலப்பு நீதிமன்றம் ஊடாக விசாரணை நடாத்தப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ள நிலையில் சர்வதேச விசாரணை முடிந்துவிட்டதாக சில முதிர்ந்த அரசியல்வாதிகள் மக்களை குழப்பிவருவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா)தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு,கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வடக்கு மாகாணசபையினால் அங்குள்ள முன்பள்ளிகளுக்கு ஆறாயிரம் ரூபா வேதனம் வழங்கப்படுகின்றது.ஆனால் அதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு மாகாணசபையினால் இங்குள்ள முன்பள்ளிகளுக்கு எந்தவித வேதனங்களும் வழங்கப்படவில்லை.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சு ஆற்றவேண்டிய சில வேலைத்திட்டங்கள் எங்களது இயலாமை காரணமாக அந்தவேலைத்திட்டங்கள் முதலமைச்சரினால் மேற்கொள்ளப்படுகின்றன.இதன்காரணமாக எமது பாடசாலைகளும் மக்களும் புறக்கணிக்கப்படும் நிலை கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முன்பள்ளிகளுக்கு உள்ளுராட்சி சபைகள் ஊடாக ஒதுக்கீடுகளைப்பெற்று முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வேதனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முன்பள்ளி ஆசிரியர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதில் அர்ப்பணிப்புமிக்க சேவையினை ஆற்றிவருகின்றனர்.அவர்களுக்கு தேவையானவற்றை செய்வதற்கு நாங்கள் நடவடிக்கைகளை எடுப்போம்.
கடந்த 30வருட கால யுத்தம் காரணமாக பெரும் இழப்புகளை எதிர்கொண்டு இன்று நல்லாட்சி என்ற காலப்பகுதியில் எமது பிரச்சினைகளுக்கு தீர்வொன்றினை எதிர்பார்த்துநிற்கும் காலப்பகுதியில் நாங்கள் உள்ளோம்.
இந்தநிலையில் எமக்கு பலம் சேர்க்கும் வகையில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் 30ஆம் திகதி வரைவு ஒன்றுவரவுள்ளது.
இன்று தமிழர்கள் மத்தியில் ஒரு குழப்பமான சூழ்நிலையினை எமது அரசியல்வாதிகள் உருவாக்கியுள்ளனர்.பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். புரையோடிப்போயுள்ள எமது இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்றைபெற்றுக்கொள்ளவேண்டுமாகவிருந்தால் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளை மேற்கொண்ட போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவேண்டுமாகவிருந்தால் அதற்கு சர்வதேச விசாரணை தேவையென நாங்கள் கோரிக்கை விடுத்துவருகின்றோம்.தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மேலாக தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
ஆனால் சில முதிர்ந்த அரசியல்வாதிகள் சர்வதேச விசாரணைகள் நடைபெற்றுவிட்டது,சர்வதேச விசாரணை இனி எதற்கு என கூறுகின்றனர்.
ஆனால் ஐ.நா.வினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் இலங்கையில் இறுதிக்கட்டத்தில் நடந்த போருக்கு சர்வதேச விசாரணை தேவை,அது கலப்பு நீதிமன்றம் ஊடாக விசாரணை நடாத்தப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ள நிலையில் சர்வதேச விசாரணை முடிந்துவிட்டதாக மக்களை குழப்புகி;ன்றனர்.
நாங்கள் இதுதொடர்பில் தெளிவாக இருக்கவேண்டும்.கடந்த காலத்தில் இலட்சக்கணக்கான உயிர்களை இழந்த நாங்கள் மீண்டும் ஒரு இழப்பினை சந்திக்ககூடாது என நினைப்போமானால் நாங்கள் ஒன்றுபட்டு சர்வதேச விசாரணை ஊடாக இணைந்த வடகிழக்கில் நிரந்தர தீர்வினைப்பெற்றுக்கொள்ளக்கூடியதான நகர்வு இருக்கவேண்டும்.

0 facebook-blogger:
கருத்துரையிடுக