ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

புதூர் திரௌபதையம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு புதூர் அருள்மிகு ஸ்ரீதிரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு உற்சவம் நேற்று மாலை ஆயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ சிறப்பாக நடைபெற்றது.

இராமாயண காவிய நாயகியாக போற்றப்படும் திரௌபதைக்கு கிழக்கிலங்கையில் சிறப்பான முறையில் உற்சவம் நடாத்தப்பட்டுவருகின்றன.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பழமைவாய்ந்த ஆலயமாக புதூர் அருள்மிகு ஸ்ரீதிரௌபதையம்மன் ஆலயம் விளங்கிவருகின்றது.

கடந்த 18 தினங்களாக ஆலயத்தின் உற்சவம் நடைபெற்றுவந்ததுடன் நேற்று முன்தினம் அம்மனின் வனவாச நிகழ்வு நடைபெற்றதுடன் அன்றிரவு தவநிலையும் நடைபெற்றது.

நேற்று பிற்பகல் மட்டக்களப்பு வாவியில் அம்பாள் தீர்த்தமாடும் நிகழ்வு நடைபெற்றதுடன் அதனைத்தொடர்ந்து ஆலய முன்றிலில் தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

பஞ்சபாண்டவர்கள் தீர்த்தமாடிய நிலையில் ஆலயம் வருகைதந்து தீக்குளியில் இறங்கி தீமதிப்பு உற்சவத்தினை ஆரம்பித்துவைத்தனர்.

இந்த உற்சவத்தில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டதுடன் தீமதிப்பு உற்சவத்தினை தொடர்ந்து அடியார்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.























Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624984

Translate