செவ்வாய், 22 செப்டம்பர், 2015

உதைபந்தாட்ட போட்டியில் ஏறாவூர் அலிகார் தேசிய மட்டத்தில் சம்பியனாக தெரிவு

யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக திங்களன்று இடம்பெற்ற 2015ம் ஆண்டின் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டிகளில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி தேசிய சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.


தேசிய சம்பியன்களை கோலாகலமாக வரவேற்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை ஏறாவூரில் இடம்பெற்றது.

ஏறாவூர் அலிகார் கல்விச் சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏறாவூர் பெற்றோல் நிலையச் சந்தியிலிருந்து ஏறாவூர் பொலிஸ் நிலையம் வரை வெற்றி பெற்ற தேசிய சம்பியன்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டிருந்தார்கள்.

கல்வி அமைச்சும் வடமாகாண கல்வி அமைச்சும் இணைந்து  ஏற்பாடு செய்திருந்த 15 வயது ஆண்கள் பிரிவு உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் அநுராதபுர புனித ஜோசெப்; கல்லூரியை எதிர்த்து மட்டக்களப்பு - ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை அணியினர் மோதினர் இதில் அலிகார் தேசிய பாடசாலை அணியினர் வெற்றி பெற்றனர்.

15 வயது ஆண் பிரிவு, 17 வயது ஆண் பிரிவு மற்றும் 19 வயது ஆண், பெண் பிரிவு ஆகிய நான்கு பிரிவுகளாக இப்போட்டிகள் கடந்த மூன்று நாட்களாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள ஆறு மைதானங்களில் இடம்பெற்றன.

17 வயது ஆண்கள் பிரிவின் இறுதியாட்டத்தில் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணியினரை எதிர்த்து வென்னப்புவ ஜோவவ்வாஸ் கல்லூரி அணியினர் மோதினர் இதில் ஜோவவ்வாஸ் கல்லூரி அணியினர் வெற்றிபெற்று கிண்ணத்தை தம்வசப்படுத்தினர்.

19 வயது ஆண்கள் பிரிவு இறுதியாட்டத்தில் கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணியினர் வெற்றி பெற்றனர்.

19 வயது பெண்கள் பிரிவினருக்கான இறுதிப் போட்டியில் குருநாகல் மாலிகா தேவா பெண்கள் கல்லூரியை எதிர்த்து பொல்காவெல பராக்கிரமபாகு மகாவித்தியாலய அணியினர் மோதினர் இதில் பொல்காவெல பராக்கிரமபாகு மகாவித்தியாலய அணியினர் வெற்றி பெற்றனர்.

யாழ் மத்திய கல்லூரி,சென் ஜோன்ஸ் கல்லூரி, மற்றும் சென் பற்றிக்ஸ் கல்லூரி ஆகிய மைதானங்களில்இறுதிப்போட்டிகள் இடம்பெற்றது.

யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற சான்றிதழ்; வழங்கும் நிகழ்வில் வடமாகாண கல்விப்பணிப்பாளர் எஸ்.ஏ. தயராசா கலந்துகொண்டு முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்றுக்கொண்ட அணிகளுக்கு சான்றிதழ்;கள் மற்றும் இலச்சனைகளை வழங்கி வைத்தார்.























Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624939

Translate