சட்டவிரோதமான முறையில் ஏறாவூர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான முதுரை மரங்களை வாழைச்சேனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸார் மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதி - மாவடிச்சேனை எனும் இடத்தில் வைத்து லொறி ஒன்றை பரிசோதனை செய்த போது, உமி மூடைகளால் மறைக்கப்பட்ட நிலையில் முதுரை மரங்கள் கடத்தப்படுவது தெரியவந்துள்ளது.
பிபிலை பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகள் கடத்தப்படுவதாக வாழைச்சேனை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
54 முதுரை மரக்குற்றிகள், லொறி என்பன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர் ஒருவரும் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0 facebook-blogger:
கருத்துரையிடுக