கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களில் சமீப நாட்களாக கரைவலைகளில் அதிகளவான கீரி மீன்கள் அகப்படுவதாக கடல் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டக் கரையோரப் பிரதேசங்களில் ஞாயிற்றுக்கிழமை தமக்கு பெரும் எண்ணிக்கையிலான கீரை மீன்கள் தமது கரை வலைகளில் அகப்பட்டதாக மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை அதிகளவான மீன்கள் பிடிபட்டுள்ளன. இதனால் உள்ளுர் மீன் பிரியர்கள் குறைந்த விலையில் ஒரு கிலோ நூறு ரூபாவுக்கு வாங்கிக் கொள்கின்றனர்.
நேற்றைய தினம் சுமார் ரூபா 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட கீரை மீன்கள் கரை வலைகளில் மாட்டியிருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இதனால் மீனவர்களினதும் மீன் வியாபாரிகளினதும் வருமானம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிடிக்கப்பட்ட மீன்களில் அதிகமானவை குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் இடப்படுவதோடு கருவாடு தயாரிப்புக்காக பீப்பாக்களில் அடைக்கப்பட்டும், இலங்கையின் ஏனைய பிரதேசங்களுக்கு வியாபாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக