செவ்வாய், 22 செப்டம்பர், 2015

திருகோணமலை கடற்கரையில் தூய்மைப்படுத்தல் செயற்திட்டம்

கரையோரப் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு திருகோணமலை கடற்கரையோரப் பகுதியினை சுத்தம் செய்யும் நடவடிக்கை இன்று காலை 7 மணி தொடக்கம் 11 மணிவரை இடம்பெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அரச அதிகாரிகள் முப்படயினர், மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டவர்கள் பங்குபற்றினர்.
இதன்போது கரையோரத்தில் காணப்பட்ட திண்மக் களிவுகள் பைகளில் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன.
மேலும் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை தொடக்கம் வெருகல் வரையிலான கடற்கரைப்பகுதிகளில் ஒரே நேரத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதனை முன்னெடுப்பதற்கு நகரில் வாழும் அனைத்து குடிமக்களும் முன்வர வேண்டும் என இங்கு உரை நிகழ்த்திய கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624967

Translate