திங்கள், 21 செப்டம்பர், 2015

இம்முறை கல்குடாவுக்கு தேசியப்பட்டியல் ! தலைவர் ரவூப் ஹக்கீம் உறுதியளிப்பு !

-இப்னு சமட் -

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் பாராளுமன்றப் பிரதிநிதித்தும் இம்முறை நிச்சயம் கல்குடாப் பிரதேசத்திற்கு வழங்கப்படுமென்றும் இதுதொடர்பாக கல்குடாவிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களோ போராளிகளோ சந்தேகமோ கவலையோ கொள்ளத் தேவையில்லை எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும்  நகர அபிவிருத்தி, நீர்வழங்கல்,வடிகாலமைப்பு அமைச்சருமாகிய கௌரவ அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்தார்.

 கடந்த 12-09-2015 ஆம் திகதியன்று  கல்குடாப் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்களில் ஒருவராகிய இஸ்மாயில் ஹாஜியாரின் இல்லத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது  அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

 இன்ஷா அல்லாஹ்  ஹஜ்ஜூப் பெருநாள் கழித்து எதிர்வரும் 27-09- 2015ஆம் திகதியளவில் இந்த நியமனம்  கட்சியின் மானத்தைக் காப்பாற்றி மாவட்டத்தில் வெற்றியை உறுதிப்படுத்திய  வகையில்  கல்குடாவின் மண்ணுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  கட்சியானது தனது சொந்தச் சினன்னமாகிய மரச்சின்னத்தில் போட்டியிட்ட இடங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமே வெற்றியைப் பதிவு செய்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.






Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624983

Translate