வெள்ளி, 25 செப்டம்பர், 2015

தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாகவும் தேசியமட்ட போட்டிகளுக்கு காரைதீவு அணி தெரிவு !!!

(லோ.சுலெக்ஸன்)
இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சினால் நடாத்தப்படும் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் மாவட்ட மட்ட போட்டிகளில் வெற்றிபெற்று காரைதீவு பிரதேசசெயல அணி நேரடியாக தேசியமட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளது. பாண்டிருப்பில் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட மட்ட போடடிகளின் இறுதிப்போட்டியில் காரைதீவு பிரதேசசெயல கூடைப்பந்தாட்ட அணி 39-16 என்ற புள்ளிகள் அடிப்படையில் பொத்துவில் பிரதேச செயலக அணியை வெற்றிகொண்டது.
இம்முறையுடன் காரைதீவு பிரதேசசெயல கூடைப்பந்தாட்ட அணி தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக தேசியமட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624978

Translate