மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட சித்தாண்டி ஸ்ரீ இராமகிருஸ்ண வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா செவ்வாக்கிழமை (22) வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.நந்தகோபால் அவர்களின் தலைமையில் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவின் ஆரம்ப நிகழ்வாக அதிதிகளுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மேளதாள வாத்தியம் முளங்க அதிதிகள் அழைக்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் பரிசளிப்பு விழாவின் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
இதன்போது இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீசிறிகிருஸ்ணராஜா, கௌரவ அதிதியாக கல்குடா வலயக்கல்வி பிரதிக்கல்விப் பணிப்பாளர் (முகாமைத்துவம்) தி.ரவி, சிறப்பு அதிதியாக ஏறாவூர் - 2 கேட்டக்கல்விப் பணிப்பாளர் பி.சிவகுரு, அழைப்பு அதிதியாக சித்தாண்டி -3 கிராமசேவகர் ரி.சுதாகரன், சித்தாண்டி சித்திரவேலாயுதர் பேராலயத்தின் வன்னிமை, அயல்பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.இதன்போது பாடசாலை மாணவ மாணவிகளினால் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் அவர்களின் சிறந்த ஆற்றல் மூலம் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அவை கலைமேடையையும் அலங்கரித்தது.
கடந்த 2012, 2013, 2014ம் ஆண்டுகளில் தரம் ஐந்து புலமைப்பரீசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள், இணைப்பாட விதான செயற்பாடுகளில் சிறந்த செயற்பாடுகளை வெளிகாட்டிய மாணவர்கள், சிறந்த வரவு மற்றும் பல விசேட திறமைகளை வெளிக்காட்டிய மாணவ மாணவிகளுக்கு நினைவுச் சின்னங்கள், சான்றிதழ்களும் நிகழ்வுக்கு வருகைதந்த அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டதுடன் பாடசாலை பரிசளிப்புக்கு வருகைதந்த அதிதிகளுக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வித்தியாலத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீசிறிகிருஸ்ணராஜா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மிகவும் சிறப்பான முறையில் பாடசாலையின் அதிபர் உட்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாடசாலையின் சமூகத்துடன் இணைந்து இவ் பரிசளிப்பு விழாவை திறன்பட நடாத்தியது மட்டுமல்ல கல்குடா கல்வி வலயத்திலே இவ் ஆண்டுக்குரிய முதலாவது பரிசளிப்பு விழாவை சித்தாண்டி ஸ்ரீ இராமகிருஸ்ண வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா அமைந்துள்ளமை குறிபிடத்தக்கது என குறிப்பிட்டார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக